போடு வெடிய.. புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?.. ரசிகர்களே தயாராகுங்கள்

ஹைதராபாத்: இந்திய சினிமாவில் கடந்த சில நாட்களாக சென்சேஷனாக இருப்பது புஷ்பா 2. அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கிய அந்தப் படத்தில் அல்லுவுடன் ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதன் முதல் பாகம் போலவே இந்தப் பாகமும் மெகா ஹிட்டாகும் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையோடு இருந்தார்கள். அதன்படியே படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது. இந்தச் சூழலில் புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

தெலுங்கு சினிமாவின் ஐகான் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் அல்லு அர்ஜுன். அவரது நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு புஷ்பா படம் வெளியானது. சுகுமார் இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. அதன் காரணமாக பான் இந்தியா அளவில் அல்லு அர்ஜுன் செமயாக ஃபேமஸ் ஆனார். அதுமட்டுமின்றி சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது. மேலும் தெலுங்கிலிருந்து தேசிய விருது பெற்ற முதல் நடிகர் என்றால் அது அல்லு அர்ஜுன் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

allu arjun ott pushpa 2

புஷ்பா 2: புஷ்பா படத்தின் முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றதையடுத்து அதன் இரண்டாம் பாகம் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. நீண்ட காலம் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தது. ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது அல்லுவுக்கும் சுகுமாருக்கும் பிரச்னை என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. இதன் காரணமாக படம் ஒழுங்காக வருமா? முதல் பாகம் போல அதிரிபுதிரி ஹிட்டடிக்குமா என்றெல்லாம் ரசிகர்களிடையே சந்தேகத்தை கிளப்பியது.

மெகா ஹிட்: ஆனால் அவர்களின் சந்தேகம் தவிடுபொடியாகிவிட்டது. சமீபத்தில் வெளியான அந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். விமர்சன ரீதியாக அப்படி இப்படி இருந்தாலும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டிருக்கிறது படம். உலக அளவில் இதுவரை 1400 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் 2000 கோடி ரூபாயை அசால்ட்டாக புஷ்பா 2 வசூலித்துவிடும் என்று திரைத்துறை ஆர்வலர்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

அல்லு அர்ஜுன் கைது: இதற்கிடையே புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க சென்றபோது பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜுனும் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அல்லுவை சம்பந்தமே இல்லாமல் கைது செய்கிறார்கள் என்று அவரது ரசிகர்கள் கொந்தளித்தார்கள். அதனையடுத்து அவர் ஜாமீன் கிடைத்து சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டார்.

ஓடிடியில் ரிலீஸ்: கைது விவகாரத்தில் பலரும் அல்லு அர்ஜுனுக்கே சப்போர்ட்டாக இருந்தார்கள். இந்நிலையில் புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படமானது ஜனவரி 9ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாவதாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை புஷ்பா 2; ஓடிடியிலும் ஏதேனும் சாதனையை படைக்குமா என்று அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X