புஷ்பா 2 ஓடிடி ரைட்ஸ்.. ஓடிடி பிசினஸிலும் பிரம்மாண்ட சாதனை.. பல கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்!
சென்னை: அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் தியேட்டரில் சக்கைப்போடு போட்டு வசூலில் இமாலய சாதனை படைத்து வரும் நிலையில், இத்திரைப்படத்தின் ஓடிடி உரிமையை எந்த நிறுவனம் எத்தனை கோடிக்கு வாங்கியிருக்கிறது என்கிற தகவல் இணையத்தில் கசிந்து பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
அல்லு அர்ஜுனின் அதிரடியான நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ஜெகபதி பாபு, தனஞ்சயா, ராவ் ரமேஷ், சுனில் மற்றும் அனசுயா பரத்வாஜ் ஆகியோர் நடித்திருந்தனர். முதல் பாகத்தில் சாதாரண கூலித்தொழிலாளியாக வரும் புஷ்பராஜ், செம்மரக்கடத்தலின் தலைவன் அனைவரையும் அனைவரின் கதையை முடித்துவிட்டு, நேரடியாக சென்னை மற்றும் மும்பைக்கு வியாபாரத்தை செய்து முதலாளியாக மாறினான. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் பாடி லாங்குவேஜ், பேசும்விதம் என அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது. அதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி விட்டது.

புஷ்பா 2: தெலுங்கு மொழியில் உருவாகிய இத்திரைப்படம், தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இந்த படத்தை தொடர்ந்து, புஷ்பா இரண்டாம் பாகம் எப்போது வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதைத்தொடர்ந்த இரண்டு ஆண்டுக்கு மேல் கடுமையான போராட்டத்திற்கு பிறகு புஷ்பா 2 திரைப்படம், 5ந் தேதி தியேட்டரில் வெளியானது. இப்படம் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் 15 நாளில் 1400 கோடிக்கு மேல் வசூலை அள்ளி வருகிறது.
கொண்டாடும் ரசிகர்கள்: சிண்டிகேட்டில் முதலாளியாக வளர்ந்து இருக்கும் அல்லு அர்ஜுன் தனது மனைவி ராஷ்மிகாவின் ஆசைப்படி, முதலமைச்சரிடம் ஃபோட்டோ எடுத்து, மனைவியிடம் காட்ட ஆசைப்படுகிறான். ஆனால், அதற்கு முதலமைச்சரே கள்ளக்கடத்தல் செய்பவனுடன் எப்படி ஃபோட்டோ எடுப்பது என நினைத்து, புகைப்படம் எடுக்க மறுத்துவிடுவார். முதலமைச்சர் ஃபோட்டோ எடுக்க சம்மதிக்காததால், அந்த முதலமைச்சரையே மாற்ற திட்டம் தீட்டுகிறார் புஷ்பா. இதனால் அவர் என்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்கிறார்? இறுதியில் எம்பி சித்தப்பாவை முதலமைச்சராக ஆக்கினாரா இல்லையா? என்பது தான் புஷ்பா 2 திரைப்படத்தின் ஒன்லைன். இந்த படத்தின் மொத்த கதையும் அல்லு அர்ஜுன் தனது தோளில் சுமந்துள்ளார். முதல் பாகத்திற்கு கிடைத்தது போல இரண்டாம் பாகத்திற்கும் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
ஓடிடி ரைட்ஸ்: இந்நிலையில், புஷ்பா 2 திரைப்படத்தின் ஓடிடி உரிமையை எந்த நிறுவனம் எத்தனை கோடிக்கு வாங்கியிருக்கிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பிரபல ஒடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமையை ரூ.270 கோடி கொடுத்து பெற்றுள்ளது. இதுவரையில், புஷ்பா 2 படம் எந்த ஓடிடியில் வெளியிடப்படும் என்ற தகவல் எதுவும் வெளியாகத நிலையில், இன்னும் ஒரு சில வாரங்கள் அதாவது ஜனவரி முதல் அல்லது 2ஆவது வாரங்களில் புஷ்பா 2 திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என எல்லா மொழிகளிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











