போஸ்ட் மார்ட்டம் டாக்டராக நடித்துள்ள அமலா பால்.. ஓடிடியில் நேரடியாக வெளியாகும் கடாவர்.. டிரைலர் இதோ!

சென்னை: ஆடை படத்திற்கு பிறகு அமலா பால் குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு அவர் மீண்டும் கதையின் நாயகியாக நடித்துள்ள கடாவர் படம் ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இயக்குநர் அனூப் எஸ். பனிக்கர் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள கிரைம் த்ரில்லர் படமான கடாவர் விரைவில் வெளியாகிறது.

தற்போது அதன் டிரைலர் டிஸ்னி ஹாட்ஸ்டார் பக்கத்தில் வெளியாகி ரசிகர்களை மிரட்டி வருகிறது.

சிந்து சமவெளி

சிந்து சமவெளி

கடந்த 2009ல் மலையாளத்தில் வெளியான நீலத்தாமரா படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால். அதைத் தொடர்ந்து தமிழில் வீரசேகரன், சிந்து சமவெளி உள்ளிட்ட படங்கள் மூலம் 2010ம் ஆண்டு அறிமுகமானார். ஆரம்பத்திலேயே போல்டான கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்த அமலா பால், தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

விஜய் இயக்கத்தில்

விஜய் இயக்கத்தில்

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் சியான் விக்ரம், அனுஷ்கா நடித்த தெய்வத் திருமகள் படத்தில் டீச்சராக நடித்து அசத்திய அமலா பால் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். மீண்டும் ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தலைவா படத்திலும் அமலா பால் தான் ஹீரோயினாக நடித்திருந்தார். தனுஷின் வேலையில்லா பட்டதாரி, வேலையில்லா பட்டதாரி 2 என ஜோடி சேர்ந்து நடித்து தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஹீரோயினாக மாறினார்.

விவாகரத்து

விவாகரத்து

2014ம் ஆண்டு திருமணம் ஆன நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இயக்குநர் ஏ.எல். விஜய்யை 2017ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார் அமலா பால். 2018ம் ஆண்டு விஷ்ணு விஷாலின் ராட்சசன் மிகப்பெரிய வெற்றியை அமலா பாலுக்கு கொடுத்தது. அம்மா கணக்கு படத்தின் மூலம் நயன்தாரா, கீர்த்தி சுரேஷை போலவே சோலோ ஹீரோயினாக மாறி இருந்தார் அமலா பால்.

ஆடை

ஆடை

இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ஆடை படத்தில் ஆடையே அணியாமல் பல காட்சிகளில் படு போல்டாக நடித்து பரபரப்பை கிளப்பி இருந்தார் அமலா பால். அந்த படத்திற்கு பிறகு பெரிதாக அவருக்கு தமிழ்ப் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு ஆந்தாலஜி படமான குட்டி ஸ்டோரி படத்தில் கெளதம் மேனன் இயக்கி நடித்த கதையில் நடித்திருந்தார். அமலா பால் நடித்த அதோ அந்த பறவை போல படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

அமலா பால் தயாரிப்பு

அமலா பால் தயாரிப்பு

இந்நிலையில், மீண்டும் தமிழில் அமலா பால் நடித்துள்ள படம் வெளியாகிறது. இந்த படத்தை அமலா பாலே தயாரித்து நடித்துள்ளார். இயக்குநர் அனுப் எஸ் பனிக்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள கடாவர் திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தற்போது அந்த படத்தின் த்ரில்லிங்கான டிரைலர் வெளியாகி உள்ளது.

ரிலீஸ் எப்போ

ரிலீஸ் எப்போ

நயன்தாராவின் உமன் சென்ட்ரிக் படங்கள், கீர்த்தி சுரேஷின் உமன் சென்ட்ரிக் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாவதை போலவே அமலா பாலின் கடாவர் திரைப்படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது. வரும் ஆகஸ்ட் 12ம் தேதி இந்த படம் வெளியாகிறது. கொலை குற்றங்களை கண்டுபிடிக்கும் ஒரு கிரைம் த்ரில்லர் படமாக இந்த கடாவர் உருவாகி உள்ளது.

போஸ்ட்மார்ட்டம் டாக்டர்

போஸ்ட்மார்ட்டம் டாக்டர்

நெற்ற்யில் அழகாக சின்ன விபூதி பொட்டு வைத்துக் கொண்டு பார்க்கவே செம க்யூட்டாக வருகிறார் அமலா பால். ஹரிஷ் உத்தமன் போலீஸாக உள்ள நிலையில், அவர் கண்டுபிடிக்கும் பிணங்களை போஸ்ட்மார்ட்டம் செய்யும் மருத்துவராக நடித்துள்ளார் அமலா பால். சமீபத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி வெப்சீரிஸில் பசுபதி இதே போன்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X