சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸின் மதராஸி.. ஓடிடி உரிமையை கைப்பற்றிய நிறுவனம் எது தெரியுமா?
சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி படத்தை இயக்கியிருக்கிறர். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த சில வருடங்களாகவே ஹிட் படம் கொடுக்க முடியாமல் திணறிவருகிறார் முருகதாஸ். எனவே எஸ்கேவை வைத்து அவர் இயக்கிவரும் இப்படத்தின் மூலம் பந்தயம் அடித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் முருகதாஸ். படமானது செப்டம்பர் ஐந்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
அஜித் நடிப்பில் உருவான தீனா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர். முருகதாஸ். முதல் படத்தை தரமாக இயக்கிய முருகதாஸ்; இந்தப் படத்தின் மூலம் அஜித்தின் கமர்ஷியல் பாதையில் அவரை ஒருபடி முன்னே நகர்த்தினார் முருகதாஸ். இதுவரை வெளியான அஜித்தின் படங்களில் வந்த தீனா படத்தில் ஏகே அறிமுகமாகும் காட்சி இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
டாப் இயக்குநர்: முதல் படம் மெகா ஹிட்டான பிறகு விஜயகாந்த்தை வைத்து ரமணா படத்தை இயக்கினார். முதல் படத்தில் கமர்ஷியலாக களமிறங்கிய முருகதாஸ் இரண்டாவது படத்தில் சமூக அக்கறையுடன் களமிறங்கினார். லஞ்சத்திற்கு எதிராக போராடும் ஒரு பேராசியரை வைத்து கோலிவுட்டை கலக்கினார் முருகதாஸ். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. குறிப்பாக அதுவரை ஆக்ஷன் ஹீரோவாகவே வலம் வந்த விஜயகாந்த் அந்தப் படத்தில் பக்குவமாக அடக்கி வாசித்திருப்பார். அடுத்ததாக இயக்கிய கஜினி இங்கு ஹிட்டாகி; ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் மெகா ஹிட்டடித்தது.

துப்பாக்கி, கத்தி: விஜய் தொடர் தோல்விகளில் துவண்டிருந்தபோது அவருக்கு பக்கா கமர்ஷியல் ஹிட் கொடுத்தது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி. அதுவரை விஜய்யை யாரும் அவ்வளவு ஸ்டைலிஷாக பார்த்ததில்லை என்ற பெயரை துப்பாக்கி பெற்றுக்கொடுத்தது. அதேபோல் விஜய்யுடன் இரண்டாவது முறை இணைந்த கத்தி படமும் மெகா ஹிட்டாக; மூன்றாவதாக இணைந்த சர்கார் அடிவாங்கியது. தொடர்ந்து முருகதாஸ் இயக்கும் படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றன. அதில் ரஜினியின் தர்பாரும் அடக்கம்.
மதராஸி: முருகதாஸ் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில்தான் படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக தெரிகிறது. வரிசையாக தன்னை தொடர்ந்துகொண்டிருக்கும் தோல்விகளுக்கு இந்தப் படத்தின் மூலம் பதிலடி தர காத்திருக்கிறார் என அவரது ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். படமானது செப்டம்பர் ஐந்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
ஓடிடி உரிமம்: இந்நிலையில் மதராஸி திரைப்படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ தமிழ் நிறுவனமும், ஓடிடி உரிமத்தை அமேசான் ப்ரைம் நிறுவனமும் கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பெரிய தொகை கொடுத்துதான் அமேசான் நிறுவனம் மதராஸியின் ஓடிடி உரிமத்தை வாங்கியிருப்ப்தாகவும் ஒரு பேச்சு ஓட ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











