குட் பேட் அக்லி ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய நிறுவனம் இதுவா?.. ஷூட்டிங்கே ஆரம்பிக்கல அதுக்குள்ளயா?

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது. அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது எங்கே தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் ஏகே ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் அஜித்தும் ஆதிக் ரவிச்சந்திரனும் இணையவிருக்கும் படத்துக்கு குட் பேட் அக்லி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்தப் படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. ஹெச்.வினோத் இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தனது 62ஆவது படத்தில் கமிட்டானார் அஜித். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி படத்தை இயக்கிவருகிறார். இதுவரை மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் படங்கள் அனைத்துமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றவை. எனவே இந்தப் படமும் கண்டிப்பாக நல்ல வரவேற்பு பெறும் என்று ஏகே ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கின்றனர்.

Amazon Prime Got Good Bad Ugly OTT Rights Here are the details

நோ அப்டேட்: சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் விடாமுயற்சி என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு கிட்டத்தட்ட 300 நாட்களை கடந்தும் படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. வலிமை படத்தின் அப்டேட்டுக்கு எப்படி ஏகே ரசிகர்கள் காத்திருந்தார்களோ அதைவிட அதிகமாகவே காத்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த அப்டேட்டும் வரவில்லை. மாறாக அஜர்பைஜானில் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.

ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஓவர்: அங்கு தொடங்கிய ஷூட்டிங்கில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதனையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு சென்னை வந்த படக்குழு குட்டி ரெஸ்ட்டில் இருந்தபோது அஜித்துக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தற்போது பைக் டூர் கிளம்பியிருக்கிறார். அவருடன் ஆரவ் உள்ளிட்டோரும் சென்றிருக்கின்றனர்.

அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி: இதற்கிடையே விடாமுயற்சி ஷூட்டிங்கே முடியாத சூழலில் அஜித்தின் 63ஆவது படம் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவின. அதன்படி மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த ஆதிக் ரவிச்சந்திரன் அந்தப் படத்தை இயக்குவார் என்றும்; நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் அவர் நடித்தபோதே கதையை சொல்லி ஓகே வாங்கிவிட்டார் என்றும் கூறப்பட்டது. இருந்தாலும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

வெளியானது அறிவிப்பு: இச்சூழலில் அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது.. அதன்படி படத்துக்கு குட் பேட் அக்லி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஓடிடி உரிமம்?: படமானது டைம் ட்ராவல் ஜானரில் உருவாகும் என்று ஒரு தகவல் வெளியாகியிருக்கும் சூழலில் படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. பல கோடி ரூபாய் கொடுத்து உரிமத்தை அந்நிறுவனம் கைப்பற்றியிருப்பதாகவும்; சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் டிவி கைப்பற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் இப்போதானே அறிவிப்பு வந்துச்சு அதுக்குள்ள இப்படியா என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X