கங்குவா ஸ்ட்ரீமாகப்போகும் ஓடிடி தளம் இதுவா?.. எவ்வளவு கொடுத்து வாங்கிருக்காங்க தெரியுமா?
சென்னை: சூர்யா நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்தச் சூழலில் அவரது நடிப்பில் கங்குவா படம் வெளியாகவிருக்கிறது. சிவா இயக்கியிருக்கும் அந்தப் படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 30க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்தப் படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் கங்குவா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
கொரோனா காலத்தில் சிறிது சிறிதாக வளர ஆரம்பித்த ஓடிடிக்கள் தற்போது அசுர வேகத்தில் வளர்ந்திருக்கின்றன. வருட சந்தா கட்டினால் போதும் குடும்பத்தோடு வீட்டிலேயே இருந்தபடி படங்களையோ, வெப் சீரிஸ்களையோ பார்க்கலாம் என்பதால் அதற்கான மவுசு அதிகரித்திருக்கிறது. ஸ்மார்ட் ஃபோன் யுகத்தில் இப்போது எல்லோரது மொபைலிலுமே ஓடிடி தளங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஓடிடியை பொறுத்தவரை தமிழில் முழு முதலாக இறங்கியது நடிகர் சூர்யாதான். அவர் நடித்த சூரரைப் போற்று படமும், ஜெய் பீம் படமும் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அதனையடுத்து பலரும் படங்களை ஓடிடி நிறுவனங்களிடம் நேரடியாக கொடுக்கும் வழக்கம் அதிகரித்தது. தொடர்ந்து வெப் சீரிஸ்கள் மீது ரசிகர்களுக்கு மோகம் அதிகரிக்க ஏகப்பட்ட வெப் சீரிஸ்கள் ஓடிடியில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

வெற்றிமாறனின் மோகம்: அப்படி வெளியாகும் வெப் சீரிஸ்கள் ஹிட்டாகவும் செய்கின்றன. வெற்றிமாறனேக்கூட வடசென்னை 2வை வெப் சீரிஸாக இயக்கவிருக்கிறார் என்ற ஒரு தகவல் ஓடியது நினைவுகூரத்தக்கது. அதேபோல் பேட்டைக்காளி என்ற வெப் சீரிஸை வெற்றிமாறன் ஓடிடிக்காக தயாரித்திருந்தார். இதனையடுத்து பிரபல இயக்குநர்களும், நடிகர்களும் ஓடிடி வெப் சீரிஸ் மீது தங்களது கவனத்தை திருப்பியிருக்கின்றனர். அதன் காரணமாக ஓடிடியில் தமிழ் கன்டெண்ட்டுகள் வருவது அதிகரித்திருக்கின்றன.
தியேட்டருக்கு பின் ஓடிடி: ஒருபக்கம் ஓடிடிக்கெனவே பிரத்யேக வெப் சீரிஸ்கள் உருவாக்கப்படும் நிலையில் தியேட்டரில் ரிலீஸாகும் படங்களும் சில வாரங்கள் கழித்து ஓடிடிக்கு வந்துவிடுகின்றனர். அதனாலேயே மக்களில் குறிப்பிட்ட சதவீதம் பேர் தியேட்டருக்கு சென்று பார்க்காமல் ஓடிடிக்கு அந்தப் படம் வரும்வரை காத்திருக்கும் பழக்கமும் அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது. சமீபத்தில்கூட கேப்டன் மில்லர் திரைப்படம் ஓடிடியில் நம்பர் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடம் பிடித்தது. ஆனால் அந்தப் படம் தியேட்டரில் போதுமான வரவேற்பை பெறவில்லை.
வியாபாரமும் ஜோர்: அதேபோல் தியேட்டரில் ரிலீஸாகவிருக்கும் படங்களை ஓடிடி நிறுவனங்கள் ரிலீஸுக்கு முன்னதாக பெரும் தொகை கொடுத்து வாங்கும் வழக்கமும் இருக்கிறது. விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோரின் படங்கள் இந்த ஓடிடி ப்ரீ பிஸ்னெஸ்ஸால் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. நேற்றுக்கூட இன்னும் ஷூட்டிங்கே தொடங்கப்படாத அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஓடிடி உரிமத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து அமேசான் ப்ரைம் நிறுவனம் லாக் செய்துவிட்டதாக ஒரு தகவல் ஓடியது குறிப்பிடத்தக்கது.
கங்குவா ஓடிடி உரிமம்: இந்நிலையில் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் கங்குவா படத்தின் ஓடிடி உரிமம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்தையும் அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது. தென்னிந்திய ரிலீஸ் உரிமத்தை 80 கோடி ரூபாய் கொடுத்து அந்நிறுவனம் வாங்கியிருப்பதாகவும்; ஹிந்தி ரிலீஸ் உரிமையை 30 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











