Kanguva OTT - கங்குவா ஓடிடி இவ்வளவு விற்பனையா?.. விஜய், அஜித்தை தூக்கி சாப்பிட்ட சூர்யா

சென்னை: Kanguva OTT (கங்குவா ஓடிடி) கங்குவா படத்தின் ஓடிடி விற்பனை மிகப்பெரிய தொகைக்கு விற்றிருப்பதாகவும் அது அஜித், விஜய் படங்களைவிட அதிகம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா சமீபகாலமாக நடித்துவரும் படங்கள் அனைத்துமே ஹிட்டாகியுள்ளன. வெறும் வசூல் மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் அவரது படங்களுக்கு பலமான வரவேற்பு கிடைத்துவருகிறது. அப்படி அவர் நடித்த சூரரைப் போற்று படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மெகா ஹிட்டானது. அந்தப் படத்துக்காக சூர்யாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

 Amazon Prime Got Kanguva OTT Rights at 80 Crores

ஜெய் பீம் சூர்யா: சூர்யாவின் கரியரிலேயே மிக மிக முக்கிய படமாக அமைந்தது ஜெய் பீம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து பத்திரிகையாளர் ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படத்தில் சந்துரு என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா. சூர்யாவுக்கு மிகச்சிறந்த பெயரை ஜெய் பீம் பெற்றுக்கொடுத்தது. அதுமட்டுமின்றி சூர்யா போல் முன்னணி நடிகர்களும் இதுபோன்ற சமூக அக்கறையுள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன.

சூர்யா 42: ஜெய் பீம் படத்தை முடித்த பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42ஆவது நடித்துவருகிறார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பெரும் பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரிக்கிறார். 10 மொழிகளில் 3டியில் வெளியாகவிருக்கும் இந்தப் படம் சரித்திர கால கதையாக உருவாகிறது. திஷா பதானி கதாநாயகியாக நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கோலிவுட்டில் இப்போது பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களில் சூர்யா 42 படமும் ஒன்று.

கங்குவா: படத்தின் பெயரும், போஸ்டரும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. படத்துக்கு கங்குவா என பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் டீசரை பார்த்த சூர்யா ரசிகர்கள் படம் நிச்சயம் மெகா ஹிட்டடிக்கும் எனவும், கங்குவா என்ற பெயர் வித்தியாசமாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர். கங்குவா என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என படத்தின் இயக்குநர் சிவாவும் விளக்கமளித்திருந்தார்.

 Amazon Prime Got Kanguva OTT Rights at 80 Crores

அஜித், விஜயை விஞ்சிய சூர்யா: இந்நிலையில் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது கங்குவா படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளம் 80 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் படங்கள் இதுவரை ஓடிடிக்கு விற்கப்பட்ட தொகையைவிட கங்குவா அதிகம் என்ற ஒரு பேச்சும் கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து அஜித், விஜய்யை சூர்யா தூக்கி சாப்பிட்டுவிட்டார் என அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

இரண்டு பாகங்கள்: இதற்கிடையே, கங்குவா படம் 2 பாகங்களாக வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் இரண்டாவது பாகத்துக்கான லீட் இருக்கும் என்று தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கொடைக்கானலில் நடந்துவரும் ஷூட்டிங்தான் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் எனவும் நவம்பரில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு தகவல் ஓடியது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X