twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    OTT ரசிகர்களுக்கு ஷாக்..! கட்டணத்தை உயர்த்துகிறது அமேசான் பிரைம்! எவ்வளவு தெரியுமா?

    |

    சென்னை: ஓடிடி தளமான அமேஸான் பிரைம் ஆண்டு சந்தா தொகையை உயர்த்தியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சினிமாத்துறை சற்று தொய்வடைந்தே உள்ளது. படப்பிடிப்பு பணிகள் மற்றும் படங்கள் திரையரங்குகளில் வெளியாவதிலும் சுணக்கம் காணப்பட்டது.

    தற்போது கொரோனா அச்சுறுத்தல் சற்று குறைந்துள்ளதால் படப்பிடிப்பு பணிகள் வழக்கம் போல் தொடங்கி நடைபெற்று வருகின்றனர்.

    அமேஸான் பிரைம்மில் ரிலீஸ் ஆகும் அக்ஷய்குமாரின் பெல் பாட்டம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு! அமேஸான் பிரைம்மில் ரிலீஸ் ஆகும் அக்ஷய்குமாரின் பெல் பாட்டம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஓடிடி தளங்கள்

    ஓடிடி தளங்கள்

    அதே நேரத்தில் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாமலேயே உள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் முன்னணி நடிகர் நடிகைகளின் படங்கள் கூட ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்பட்டன.

    ஓடிடி தளங்களுக்கு வரவேற்பு

    ஓடிடி தளங்களுக்கு வரவேற்பு

    தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்ட போதும் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருதால் குறைந்த பட்ஜெட் படங்கள் இன்னமும் ஓடிடி தளங்களையே நாடி வருகின்றன. கொரோனா காலத்தில் ஓடிடி தளங்களான அமேஸான், ஹாட் ஸ்டார், நெட்ஃபிளிக்ஸ், ஜீ 5 போன்றவற்றுக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது.

    ஆண்டு சந்தா கட்டணம் உயர்வு

    ஆண்டு சந்தா கட்டணம் உயர்வு

    இந்நிலையில் ஓடிடி தளமான அமேஸான் பிரைம் ஆண்டுக்கான சந்தா தொகையை உயர்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தற்போது ஆண்டு சந்தா தொகையாக 999 ரூபாய் வசூலிக்கக்கப்பட்டு வரும் நிலையில் இதனை 1499 ரூபாயாக உயர்த்தியுள்ளது அமேஸான் பிரைம் ஓடிடி தளம்.

    50% கட்டண உயர்வு - ரசிகர்கள் அதிர்ச்சி

    50% கட்டண உயர்வு - ரசிகர்கள் அதிர்ச்சி

    இந்த அதிகரிக்கப்பட்ட கட்டணம் விரைவில் அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே அடியாக 50 சதவீத கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அமேஸான் நிறுவம் 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்டதன் ஆஃபராக 60 நாட்கள் ஃபிரி ட்ரையலும் ஆண்டுக்கு 499 ரூபாய் கட்டணமாகவும் அறிவிக்கப்பட்டது.

    மாதந்திர சேவை நிறுத்தம்

    மாதந்திர சேவை நிறுத்தம்

    அந்த ஆஃபர் நிறைவடைந்ததும் ஆண்டுக் கட்டணம் 999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே 129 ரூபாய்க்கு அளிக்கப்பட்டுவந்த மாதாந்திர சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Amazon Prime increase annual membership fees. Around 50% hike is there in the annual membership fees.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X