திட்டம் போட்டு திருடும் வில்லன்.. அப்பாவி ஹீரோ.. ரத்தம் தெறிக்க தெறிக்க வந்த VINCI DA

சென்னை: தமிழ் சினிமாவில் அநியாயத்தை கண்டு பொங்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் மிக எதார்த்தமாக கொலை செய்துவிட்டு அதில் இருந்து தப்பிக்க நினைக்க ஹீரோக்களின் வரிசை அதிகரித்திருக்கிறது. அப்போதே ரூட்டு போட்டு கொடுத்தவர் எஸ்.ஏ.சி. அதை கெட்டியாக பிடித்துகொண்டு பிரம்மாண்டம் காட்டியவர் இயக்குநர் ஷங்கர். ஆனால், ஒரு 18 வயது ஆகாத ஒருவன் செய்யும் கொலை. அதற்கு பின்னால் நடக்கும் அநீதி கதைகளை பேசும் படத்தை தான் இப்போது பார்க்க போகிறோம்.

அமேசான் பிரைமில் வெளியான வின்சி டிஏ என்ற பெங்காலி படம் வெளியாகி அதிக பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது. இதேமாதிரியான வெப் தொடர் தமிழில் பார்த்து ரசிக்க முடியாது. பார்வையாளர்கள் மட்டும் அல்ல திரை பிரபலங்களையும் கவர்ந்திருக்கிறது. வின்சி டிஏ. ஒரு 17 வயசு முடிஞ்சு 18 வயசு ஆக இன்னும் 6 மணி நேரம் தான் இருக்கு.அப்போ அந்தப்பையனோட அப்பா அவனோட அம்மாவை அடிச்சிட்டு இருக்காரு. ஆனால், அந்த பையன் அப்பாவிடம் வேணாம்ப்பா, அம்மாவை அடிக்காதேனு சொல்றான், அப்பா கேட்கலை , கிரிக்கெட் பேட் எடுத்து ஒரே போடு... ஆள் அவுட் .

இதுதான் ஒப்பனிங் சீன். இதை பார்க்கும் போது சிலருக்கு புதுப்பேட்டை நினைவுப்படுத்தும் ஆனால் இப்படியொரு காட்சி ஆடியன்சுக்கு? எப்படி இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். அதுவும் கொலை செய்தவன் 18 வயது பூர்த்தி அடையாத மைனர் என்பதால் பெரிய தண்டனை இல்லாமல் தப்பிக்கிறான். தந்தையை கொலை செய்த பையன் தான் சட்டம் படித்து பெரிய கிரிமினல் ஆகின்றான். இப்படி ஒரு கேரக்டர் ஒரு பக்கம் நம்மை மிரட்டுகிறது. இதையும் தாண்டி ஒரு கேரக்டர் அறிமுகம் என்ன செய்கிறது என்பதை பார்ப்போம் வாங்க.

amazon-prime-ott-release-in-vinci-da-movie-review

சந்தர்ப்பம்: வழக்கு எண் படத்தில் ஒரு சின்ன பையன் கூத்து கட்டி நல்ல கலைஞன் என பெயர் எடுத்திருந்தாலும் வயிற்று பிழைப்பிற்காக சென்னை நோக்கி வருகிறான். அங்க சினிமா வாய்ப்பு தேடி அலைவான். அதே மாதிரி ஒரு திறமையான கலைஞன்தன் இந்த கதாப்பாத்திரம். மிகத்திறமையான ஒப்பனைக்கலைஞன். அவன் திறமை அபாரமானது . பலரிடம் சினிமா சான்ஸ் கேட்டுப்போறான் , எதுவும் சரியா அமையலை . விரக்தி அடைஞ்ச அவனை அந்த க்ரிமினல் யூஸ் பண்ணிக்க நினைக்கிறான். ஒரு பிரபலமான தொழில் அதிபர் , அவரைப்பற்றி பயோ பிக்சர் எடுக்கனும், அவரை மாதிரியே உருவ அமைப்பு , முக ஒற்றுமையுடன் கூடிய மேக்கப் போட்டு விடனும்னு ஹீரோ கிட்டே சொல்றான் வில்லனான கிரிமினல் லாயர்.

கொலை: அச்சு அசலா அந்த தொழில் அதிபர் மாதிரியே மேக்கப் போட்டு விடறான் ஹீரோ . அந்த தோற்றத்தில் ஒரு பேங்க் ஏடிஎம்மில் கொள்ளை அடிச்சு கொலையும் செய்து, சிசிடிவி கேமராவில் ஆதாரம் ஆக்கி அந்த தொழில் அதிபரை சிக்க வைக்கறான் வில்லன். இதே மாதிரி ராபின்ஹூட் படங்களில் வருவது போன்று மாறு வேடத்தில் 3 வெவ்வேறு மேக்கப், வேறு மாதிரியான சம்பவங்களை வைத்து கொலை, கொள்ளை செய்யும் வில்லன் செய்வது நல்லது செய்வது போன்று இருந்தாலும் அதில் நல்லவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஹீரோவால் ஏற்க முடியவில்லை.

amazon-prime-ott-release-in-vinci-da-movie-review

சாட்சி: தப்பு செய்து சாட்சிகள் இல்லாம தப்பிக்கற பணக்கார கிரிமினல்களை அவங்க செய்யாத தப்புக்காக ஆதாரத்துடன் சட்டப்படி தண்டனை வாங்கித்தருவதுதான் வில்லனின் ஃபார்முலா. ஹீரோவுக்கும் , வில்லனுக்குமான இந்த செஸ் கேமில் செக் மேட் வைத்தது யார்? எப்படி? என்பது கதை ரொம்ப விறுவிறுப்பாக போர் அடிக்காத த்ரில்லர் கிரைம் ஸ்டோரியாக அமேசான் பிரைமில் இருக்கிறது.

சைக்கோ: படத்தின் ஓப்பனிங் சீன்லயே வில்லன் இண்ட்ரோ ஆடியன்ஸ் மனதில் ஆழமாக பதிவாகிறது. கொலை செய்து தப்பியவனை அதே போல் ஒரு கொலை செய்து அந்த கேசில் மாட்டிவிடுவது, கொள்ளை , திருட்டு கேசில் தப்பியவனை அதே டைப் திருட்டுக்கேசில் மாட்டி விடுவது எல்லாம் ஓக்கே , ஆனா ரேப் கேசில் தப்பியவனை அதே போல் ஒரு ரேப் கேசில் மாட்ட வைப்பதற்காக வில்லன் அப்பாவிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது எல்லாம் மிக மிக கொடூரம். பார்கக நல்லவன் போன்று காட்சிக்கு தோன்றினாலும் ஒரு சைக்கோ வில்லனை நேரில் பார்த்தது போன்ற உணர்வைத் தருகிறது.

மேக்கப் மேனாக வரும் ஹீரோவிற்கு சரியான வருமானம் இல்லை, நிரந்தர வேலை இல்லை என்பதால் காதலியிடம் பம்மிக்கொண்டே பழகுவது , காதலில் கண்ணியம் காப்பது, மனசாட்சி உறுத்துவது , தன் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காதபோதும் கலைஞனுக்குரிய கர்வம், கெத்து காட்டுவது என கச்சிதமாக Rudranil Ghosh நடித்திருக்கிறார். இதில், நாயகியாக நடித்திருக்கும் Sohini Sarkar மிக இயல்பான நடிப்பு மற்றும் பார்க்க பக்கத்து வீட்டுப்பெண் போன்ற தோற்றம். ஒப்பனை மிகை இல்லாமல் உடலில் நகை இல்லாமல் எளிமையான அழகுக்கு சொந்தக்காரராக மிளிர்கிறார். இந்த 3 கதாப்பாத்திரங்களை வைத்து Srijit Mukherji மிக அற்புதமாக இயக்கியிருக்கிறார்.

பலவீனம்: நம்முடைய பலவீனமாக நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எதைச் சொல்கிறார்களோ அது நமது பலவீனம் அல்ல. அவர்கள் சொல்வதை கண்மூடித்தனமாக நம்பத் தொடங்கும் போது தான் உண்மையாகவே நாம் பலவீனம் அடைகிறோம். எத்துணை கடினமான புழுதியை காற்று நம் மீது வாரித் தூற்றினாலும் "மிகச்சிறிய கண் இமைகள்" நமது கண்களை பாதுகாக்கும் வல்லமையுடன் இயங்குவதை நீங்கள் அறிவீர்கள். நமது பலம் பிறர் கண்களுக்கு தென்படாமல் போனாலும் தக்க நேரத்தில் அது நம்மைக் காக்கும். இதேபோன்ற வாசகங்கள் படம் முழுக்க சொல்லாமல் ஒரு கதை சொல்கிறது.

பாராட்டு: நாயகன் நாயகி சந்திக்கும் இடங்கள் ரசிக்கும் படி இருக்கின்றன. பிரமாதமான பின்னணி இசையும், . ஒவ்வொரு சந்திப்பிலும் வெவ்வேறு லொக்கேசன்கள் , ரசிக்கும்படி தேர்வு செய்த விதத்தை பாராட்டலாம். எடுத்துக்கொண்ட கதை வழக்கமான கமர்ஷியல் ,மசாலா படத்துக்கானது என்றாலும் அதை படமாக்கிய விதத்தில் தன் தனி திறமையை காட்டி இது கலை கலந்த கமர்ஷியல் என ஆங்காங்கே உணர்த்திய விதம் வியப்பை தருகிறது. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் யூகிக்க முடிந்தது என்றாலும் எக்ஸ்க்யூட் பண்ணிய விதம் சிறப்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X