Don't Miss!
- Technology
Oneplus Nord 2T 5G வந்தாச்சு: பட்ஜெட் விலையில் நச்சுனு அம்சம்- கொடுக்குற காசுக்கு தகுமா?
- News
வருமான வரித்துறையிடம் எனக்கு லவ் லெட்டர் வந்திருக்கிறது.. ஐடி நோட்டீஸ் குறித்து சரத்பவார் கிண்டல்
- Lifestyle
மிதுனம் செல்லும் புதனால் அடுத்த 15 நாட்கள் இந்த ராசிகளுக்கு செம சூப்பரா இருக்கப் போகுது...
- Automobiles
ஆவ்சம்... இந்தியாவில் வெளியீட்டை பெற்றது டொயோட்டா ஹைரைடர்... ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சத்துடன் வந்திருக்கு!
- Finance
தங்கம் ஆர்வலர்கள் பெரும் ஷாக்.. இறக்குமதி 5% அதிகரிப்பு.. இனி விலை என்னவாகும்
- Sports
யாரும் எடுக்காத துணிச்சல் முடிவு..? இந்திய ப்ளேயிங் 11ல் அஸ்வினின் நிலை என்ன?- டிராவிட்டின் ஐடியா
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
முன்னணி நடிகர்கள்... இயக்குநர்கள்... அடுத்தடுத்த வெப் தொடர்கள்... களத்தில் அமேசான் ப்ரைம்
சென்னை : கொரோனா பரவல் கொடுத்த வரம் ஓடிடி தளங்கள். அதிலும் சர்வதேச அளவில் வெப் தொடர்கள் இதன்மூலம் ரசிகர்களை அதிகளவில் ரீச் செய்துள்ளது. இந்தியாவிலும் பல வெப் தொடர்கள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.இதையடுத்து ஓடிடி தளங்கள் அதிகமாக வெப் தொடர்களை ரசிகர்களுக்கு கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.
வெப் சீரிஸ்ல பாட்டுக்கு பட்ஜெட் கிடையாது.. நடிகை நமீதா சுவாரஸ்யம்!

வரவேற்பை பெறும் வெப் தொடர்கள்
கொரோனா காரணமாக வீட்டில் முடங்கிய ரசிகர்களுக்கு உறுதுணையாக இருந்தது ஓடிடி தளங்கள்தான். அந்த வகையில் அனைத்துவிதமான படங்களையும் அதன் துணையுடன் வீட்டிலிருந்தபடியே பார்க்க அவர்கள் தயாராகினர். அதிலும் குறிப்பாக சமீப காலங்களில் வெப் தொடர்கள் சர்வதேச அளவில் ரசிகர்களை வெகுவாக ரீச் செய்துள்ளது.

ரசிகர்களை ஈர்க்கும் வெப் தொடர்கள்
இந்தியாவிலும் ரசிகர்களை வெப் தொடர்கள் சமீப காலங்களில் அதிகமாக கவர்ந்து வருகிறது. இதனை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாலிவுட்டில் பேமிலி மேன் மற்றும் மேமிலி மேன் 2, சேக்ரட் கேம்ஸ் உள்ளிட்ட வெப் தொடர்கள் அதிகமான ரசிகர்களை பெற்றுள்ளன.

களத்தில் இறங்கிய அமேசான் பிரைம்
இந்த சூழ்நிலையை அதிகமாக பயன்படுத்தும்வகையில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் தற்போது தமிழில் அதிகமான வெப் தொடர்களை உருவாக்கி வருகிறது. இதையொட்டி நேற்றைய தினம் நடத்தப்பட்ட விழாவில் தங்களது தயாரிப்பில் உருவாகிவரும் வெப் தொடர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

முன்னணி நடிகர்களின் தொடர்கள்
இந்த தொடர்களில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் படைப்புகளும் உள்ளன. இவை விரைவிலேயே அமேசான் பிரைமில் ரசிகர்களுக்கு காணக் கிடைக்கும். நெற்றிக் கண் இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் தி வில்லேஜ் என்ற வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

புஷ்கர் -காயத்ரியின் 2 தொடர்கள்
இதேபோல விக்ரம் வேதா இயக்குநர்கள் புஷ்கர் -காயத்ரி நிறுவனமான வால்வாட்சன் தயாரிப்பில் உருவாகிவரும் சுழல் என்ற வெப் தொடரும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். தொடரை பிரம்மா மற்றும் அருண்சரண் இயக்கி வருகின்றனர்.

மாடர்ன் லவ் சென்னை தொடர்
இவர்களது அடுத்த தயாரிப்பான வதந்தி என்ற வெப் தொடரில் எஸ்ஜே சூர்யா, நாசர், லைலா, சஞ்சனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதனிடையே, பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜூ முருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்ஷய் சுந்தர் உள்ளிட்டோர் இயக்கும் மாடர்ன் லவ் சென்னை தொடரையும் அமேசான் பிரைம் அறிமுகப்படுத்தியுள்ளது.

விரைவில் ஒளிபரப்பு
இந்த தொடரில் கிஷோர், ரேஷ்மா, அசோக்செல்வன், ரிதுவர்மா, விஜயலட்சுமி, ரம்யா நம்பீசன், கௌரி ரெட்டி, சம்யுக்தா விஸ்வநாதன், வாசுதேவன் முரளி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். விரைவில் இந்த தொடரும் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.