தள்ளிப்போன காந்தாரா.. ஓடிடியில் வெளியானது பொன்னியின் செல்வன்.. ஜெயம் ரவி மகிழ்ச்சி ட்வீட்!

சென்னை: ராஜ ராஜனின் சதய விழா நடைபெற்ற நிலையில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பொன்னியின் செல்வன் வெளியாகி உள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 30ம் தேதி தமிழ் சினிமாவின் முதல் ஐமேக்ஸ் திரைப்படமாக தியேட்டர்களில் வெளியான இந்த படம் இன்று ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தள்ளிப்போன காந்தாரா

தள்ளிப்போன காந்தாரா

பொன்னியின் செல்வன், காந்தாரா என அமேசான் பிரைமில் ஒரே நாளில் இரு பெரிய படங்கள் வெளியானால் ரசிகர்கள் எந்த படத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்கிற யோசனையில் கடைசி நேரத்தில் காந்தாரா படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிப் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காந்தாரா படத்தை ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ள நிலையில், முதலில் பொன்னியின் செல்வனை இறக்கி இருக்கிறது அமேசான் பிரைம்.

ஓடிடியில் பொன்னியின் செல்வன்

ஓடிடியில் பொன்னியின் செல்வன்

கடந்த வாரமே அமேசான் பிரைம் ஓடிடியில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 199 ரென்ட் கொடுத்து பார்க்கும் வசதியில் வெளியானது. இந்நிலையில், இன்று முதல் அமேசான் பிரைம் சப்ஸ்கிரைபர்கள் பொன்னியின் செல்வன் படத்தை இலவசமாக பார்க்கலாம் என்கிற ரீதியில் வெளியாகி உள்ளது.

காலை முதலே டிரெண்டிங்

காலை முதலே டிரெண்டிங்

அமேசான் பிரைம் ஓடிடி ரசிகர்கள் காலை முதலே பொன்னியின் செல்வன் படத்தை கண்டுகளித்து வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்கனவே தியேட்டரில் பார்த்து ரசித்த நிலையில், மீண்டும் ஒருமுறையல்ல எத்தனை முறை வேண்டுமானாலும் இனி பார்த்துக் கொள்ளலாம் என்பதால் திரும்பவும் படத்தை போட்டு பார்த்து வருகின்றனர்.

வச்சி செய்வாங்களே

வச்சி செய்வாங்களே

பொன்னியின் செல்வன் படம் தியேட்டரில் கடகடவென ஓடி முடிந்த நிலையில், அதற்கான விமர்சனங்கள் பெரிதளவில் கிளம்பவில்லை. ஆனால், தற்போது ஒடிடியில் வெளியாகி உள்ள நிலையில், ஒவ்வொரு காட்சியும் எப்படி இருக்கிறது. எப்படி எடுக்கப்பட்டுள்ளது என்கிற விமர்சனங்களும், விவாதங்களும் சோஷியல் மீடியாவில் கிளம்பி உள்ளன.

ஜெயம் ரவி மகிழ்ச்சி

ஜெயம் ரவி மகிழ்ச்சி

ராஜ ராஜசோழனுக்கு சதய விழா. இவரது புகழையும், பெருமையும் போற்றி, அடுத்த தலைமுறைக்கு பகிர்ந்து பெருமை கொள்வோம். பொன்னியின் செல்வனாக திரையில் உம்மை பிரதிபலிக்க "நான் என்ன தவம் செய்தேனோ. என நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட்டுக்கு கீழ் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

பிரம்மாஸ்திரா ரிலீஸ்

பிரம்மாஸ்திரா ரிலீஸ்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிரம்மாஸ்திரா திரைப்படம் வெளியாகி உள்ளது. நவம்பர் 4ம் தேதியான இன்று ஓடிடியில் இந்த இரு பிரம்மாண்ட படங்களுக்கு இடையே தான் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. எந்த படத்திற்கு ரசிகர்கள் அதிகம் ஆதரவு கொடுக்கின்றனர் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். சில நாட்களுக்கு முன்னதாக வெறும் 10 நிமிடக் காட்சிகள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இலவசமாக ஒளிபரப்பு செய்து வந்தது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X