ஜனநாயகன் படத்துக்கு எதிராக இன்னொரு வழக்கா?.. ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைம் வீடியோ அட்டாக்?
சென்னை: நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு இதுவரை சென்சார் சான்று வழங்கப்படவில்லை. அதுதொடர்பான வழக்கு தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது. இன்று உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்து முடித்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஜனநாயகன் படத்துக்கு எதிராக இன்னொரு வழக்கை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் தாக்கல் செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி படக்குழுவை மேலும், அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு படத்திற்கு சென்சார் சான்று வழங்கப்படாமல் எப்படி ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியும் என தணிக்கை வாரியம் தொடர்ந்து வாதிட்டு வந்த நிலையில், கேவிஎன் தரப்பு வழக்கறிஞர் துரந்தர் 2வுக்கு இப்போதே ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டனர் என்று கூறியுள்ளார்.
படம் தொடங்கும் போதே ரிலீஸ் தேதி: ஜனநாயகன் படம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல படங்கள் தொடங்கும் போதே ரிலீஸ் தேதியை அறிவித்து அதற்கான வியாபாரங்களை தொடங்கி விட்டுத்தான் படப்பிடிப்புக்கே செல்கின்றன. கேவிஎன் தயாரிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படம் மற்றும் துரந்தர் 2 உள்ளிட்ட படங்கள் மார்ச் மாதம் வெளியாகும் என தேதியையும் அறிவித்துள்ளனர். ராமாயணா திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் பாகம், அடுத்த தீபாவளிக்கு 2ம் பாகம் வரும் என்றும் அறிவித்துள்ளனர். ராஜமெளலியின் வாரணாசி படத்துக்கும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பராசக்தி படத்துக்கு கூட 10ம் தேதி ரிலீஸ் தேதி என அறிவிக்கப்பட்டு ஷார்ப்பாக சென்சார் வாங்கி படத்தை ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், விஜய் படத்துக்கு எதிராக தணிக்கை வாரியம் இந்த பாயின்ட்டை ஏன் தொடர்ந்து முன் வைத்து வருகிறது என்பது தான் வேடிக்கையாக உள்ளது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
அமேசான் பிரைம் ஆப்பு வைக்க ரெடி?: ஏற்கனவே ஜனநாயகன் வழக்கு ஒரு பக்கம் சிபிஐ விசாரணை ஒரு பக்கம் என விஜய்க்கு பல கத்திகள் குத்தப்பட்டு வரும் நிலையில், அடுத்ததாக ஜனநாயகன் ஓடிடி தொடர்பாக அமேசான் பிரைம் வீடியோவும் ஒரு வழக்கு தொடரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனநாயகன் ஓடிடி உரிமையை சுமார் 120 கோடி கொடுத்து அமேசான் பிரைம் வாங்கியதாக கூறப்படும் நிலையில், பிப்ரவரி மாதமே ஓடிடியில் வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில், இன்னமும் ஜனநாயகன் ரிலீஸ் தேதியே கன்ஃபார்ம் ஆகாத நிலையில், தங்களுக்கு பெரிய இழப்பு ஏற்படும் என அந்த நிறுவனமும் வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளது என்றும் அமேசான் பிரைம் நிறுவனம் நஷ்ட ஈடு கேட்டால் என்ன செய்வது என்றும் கேவிஎன் தரப்பில் இன்றைய வாக்குவாதத்தின் போது கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனநாயகன் எப்போ ரிலீஸ் ஆகும்?: இந்த வாரம் இறுதிக்குள் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், தணிக்கை வாரியம் மீண்டும் உச்சநீதிமன்றத்துக்கு சென்று வாதாடும் என்றே தெரிகிறது. உச்சநீதிமன்றம் முதலில் இருந்து வழக்கை விசாரித்து தணிக்கை குழுவுக்கு சாதகமாக ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பச் சொன்னால், ஜனநாயகன் பிப்ரவரி மாதம் கூட வெளியாகாது என்கின்றனர். கேவிஎன் தயாரிப்பு நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் மட்டுமே ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி முடிவாகும். அதுவரை அமேசான் பிரைம் காத்திருக்குமா? என்பதும் சந்தேகம் தான்.


Click it and Unblock the Notifications











