அழகான காதல் உணர்வின் கதை ‘மாடர்ன் லவ் ஹைதராபாத்‘.. அமேசானில் ரிலீஸ்!

சென்னை : 'மாடர்ன் லவ் ஹைதராபாத்' ஆந்தாலஜி தொடர் ஜூலை 8ந் தேதி அன்று வெளியாக உள்ளது.

நாகேஷ் குக்குனூர், வெங்கடேஷ் மஹா, உதய் குர்ராலா, தேவிகா பஹுதனம் ஆகியோர் இயக்கிய ஆறு சுவாரசியமானக் கதைகளைக் கொண்ட அந்த ஆந்தாலஜி தொடரில் மனித உறவுகளைப் பற்றி அழகாக காட்டப்பட்டுள்ளது.

எஸ்.ஐ.சி ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் இந்த சீரிஸ் அமேசாம் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

‘மாடர்ன் லவ் மும்பை‘

‘மாடர்ன் லவ் மும்பை‘

அமேசான் பிரைமில் கடந்த மாதம் 'மாடர்ன் லவ் மும்பை' என்ற தலைப்பில் ஆந்தாலஜி திரைப்படம் வெளியான. அந்த தொடரை விஷால் பரத்வாஜ், ஹன்சல் மேத்தா, ஷோனாலி போஸ், துருவ் சேகல், அலங்கிரிதா ஸ்ரீவஸ்தவா மற்றும் நூபுர் அஸ்தானா என ஆறு இயக்குநர்கள் இணைந்து உருவாக்கி இருந்தார். இதில் ஒவ்வொருக்கதையும் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.

மாடர்ன் லவ் ஹைதராபாத்

மாடர்ன் லவ் ஹைதராபாத்

மாடர்ன் லவ் மும்பை ஆந்தாலஜி தொடரின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மாடர்ன் லவ் ஹைதராபாத் என்ற பெயரில் புது ஆந்தாலஜி வெப் தொடர் வெளியாக உள்ளது. அமெரிக்க நாளிதழான தி நியூ யார்க் டைம்ஸ் இதழில் வெளிவரும் பிரபல கட்டுரைகளை அடிப்படையாக் கொண்டு , ஹைதராபாத்தில் நடைபெறும் கதைகளை மையக்கருவாகக் கொண்டு இந்த சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆறு ஆந்தாலஜி கதைகள்

ஆறு ஆந்தாலஜி கதைகள்

1. MY UNLIKELY PANDEMIC DREAM PARTNER : என்ற பெயரில் இயக்குநர் நாகேஷ் குக்குனூர் ஒரு வித்தியாசமான கதையை உருவாக்கி உள்ளார். அந்த தொடரில் நடிகை ரேவதி, நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

2. FUZZY, PURPLE AND FULL OF THORNS : நாகேஷ் குக்குனூர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் ஆதி பினிசெட்டி, ரிது வர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

3. WHAT CLOWN WROTE THIS SCRIPT : உதய் குர்ராலா இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் அபிஜீத் டுட்டாலா, மாளவிகா நாயர் ஆகியோர் நடித்துள்ளனர்.

4. WHY DID SHE LEAVE ME THERE : நாகேஷ் குக்குனூர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சுஹாசினி மணிரத்னம், நரேஷ் அகஸ்தியா ஆகியோர் நடித்துள்ளனர்.

5. ABOUT THAT RUSTLE IN THE BUSHES - தேவிகா பஹுதனம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் உல்கா குப்தா, நரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

6. FINDING YOUR PENGUIN... வெங்கடேஷ் மஹா இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் கோமளி பிரசாத் நடித்துள்ளார்.

மனித உணர்வுகளின் கதை

மனித உணர்வுகளின் கதை

ஆறு எபிசோடுங்கள் கொண்ட மாடர்ன் லவ் ஹைதராபாத் தொடரில் மூன்று கதைகளை நாகேஷ் குக்குனூர் இயக்கி உள்ளார். அரவணைப்பு, மென்மை, உண்மையான மற்றும் மனித உணர்வுகள் நிறைந்த இந்தக் கதைகள் ஒவ்வொன்றின் ஒவ்வொரு சுவாரசியம் ஒளிந்து இருக்கிறது. மும்பை மற்றும் ஹைதராபாத்தைத் தொடர்ந்து, மாடர்ன்: லவ் சென்னை தொடர் விரைவில் உருவாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X