Angira Dhar: அடக் கன்றாவியே.. போஸ்டரே இவ்ளோ ஆபாசமா இருக்கே.. அப்போ வெப்சீரிஸ் எப்படி இருக்கும்?
மும்பை: பாலிவுட் நடிகை அங்கிரா தர் நடிப்பில் உருவாகி உள்ள 'Saas Bahu, Aur Flamingo' வெப்சீரிஸின் படு ஆபாசமான போஸ்டரை ஷேர் செய்து இயக்குநருக்கு நன்றி தெரிவித்துள்ளார் அங்கிரா.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த மே மாதம் 5ம் தேதி வெளியான இந்த வெப்சீரிஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

அடல்ட் காட்சிகள் நிறைந்த இந்த வெப்சீரிஸ் வெற்றியடைந்த நிலையில், இப்படியொரு போஸ்ட்டை நடிகை அங்கிரா பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை அங்கிரா தர்: 2018ல் வெளியான லவ் பர் ஸ்கொயர் ஃபீட் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அங்கிரா தர். அந்த படத்தை இயக்கிய ஆனந்த் திவாரியையே காதலித்து திருமணமும் செய்துக் கொண்டார்.
கமாண்டோ 3, ரன்வே உள்ளிட்ட படங்களிலும் நடித்த அங்கிரா வெப்தொடர்களில் படுகவர்ச்சியாக நடித்து வருகிறார்.
ஒடிடியில் வேறலெவல் ஹாட்னஸ்: 2015ல் வெளியான பேங் பஜா பாரத் வெப்சீரிஸ் மூலம் ஹாட் நடிகையாக மாறிய அங்கிரா தர் இந்த மாதம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான Saas Bahu, Aur Flamingo வெப்சீரிஸில் டாப்லெஸ் ஆக நடித்து ரசிகர்களின் பிபியை எகிற வைத்துள்ளார்.
திம்பிள் கபாடியா, இஷா தல்வார் உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் இணைந்து அங்கிராவும் இந்த வெப்சீரிஸில் நடித்துள்ளார். இயக்குநர் ஹோமி அதஜனியா இந்த வெப்சீரிஸை இயக்கி உள்ளார்.

ஆபாச போஸ்டரை வெளியிட்ட நடிகை: சாசு பாஹு வெப்சீரிஸ் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்துள்ள நிலையில், அந்த வெப்சீரிஸில் அரை நிர்வாணமாக ஒரு நபரை கட்டி வைத்து அவர் மீது ஏறி அமர்ந்திருக்கும் விதமாக படு ஆபாசமான போஸ்டரை வெளியிட்டு நடிகை இயக்குநருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
எனக்குள் இருந்த அசுரத்தனமான நடிகையை வெளியே கொண்டு வந்த என் இயக்குநருக்கு நன்றி. இயக்குநர் சொன்னதும் எப்படி ரெடியாகி இந்த சீனில் நடித்தேன் என எனக்கே தெரியவில்லை. ரசிகர்கள் மத்தியில் இருந்து நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது அதிக மகிழ்ச்சியை தருகிறது என தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கேப்ஷனாக கொடுத்துள்ளார் அங்கிரா.
ரசிகர்கள் விளாசல்: ஓடிடியில் சென்சார் இல்லை என்பதால் தொடர்ந்து நடிகைகள் உச்சகட்ட ஆபாசமாக நடித்து வருகின்றனர். இதெல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ என்றும் ஆடை அணியாமல் எப்படி அசிங்கமா நடிச்சிருக்கீங்க என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

அங்கிராவின் முன் பக்கத்தை காட்டலையே என ஜொள்ளு பார்ட்டி நெட்டிசன்கள் எல்லாம் அந்த காட்சிக்கு ஃபயர் விட்டு வருகின்றனர். வெப்சீரிஸ் சூப்பர் என்றும் அங்கிராவின் நடிப்பு அசத்தல் என்றும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications