அனிமல் படத்தால் திடீரென ஹேப்பியான நெல்சன்.. அடேங்கப்பா இப்படியொரு காரணமா?.. செம மீம்!
சென்னை: அனிமல் படம் நல்லா இருக்கா? இல்லையா? என ஒரு பக்கம் சோஷியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு அடிதடி சண்டையே நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த சண்டையில் ஒரு நல்ல விஷயம் நமக்கு நடந்திருக்கே என நெல்சன் ஹேப்பியாகி விட்டார் என ஒரு மீம் செம டிரெண்டாகி வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி பான் இந்திய படமாக அனிமல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ஏ சான்றிதழ் மற்றும் 3 மணி நேரம் 25 நிமிட படமாக வெளியான நிலையிலும், அனிமல் படத்தை ரசிகர்கள் தியேட்டரில் பார்த்து மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றினர். சுமார் 900 கோடி வசூலை அந்த படம் ஈட்டியதாக தகவல்கள் வெளியானது.

அர்ஜுன் ரெட்டி இயக்குநர்: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் 60 நாட்களுக்கு முன்னதாகவே ஓடிடியில் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான இந்த படத்தை தியேட்டரில் பார்க்காத பலர் தற்போது ஓடிடியில் பார்த்து விட்டு படத்தை கழுவி ஊற்றி வருகின்றனர்.
தெலுங்கு ரசிகர்கள் ஆதரவு: அனிமல் எல்லாம் ஒரு படமா என தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் சில பிரபலங்கள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தெலுங்கு ரசிகர்கள் தமிழில் வெளியான லியோ படமெல்லாம் ஒரு படமா என சண்டையை ஆரம்பித்துள்ளனர். மேலும், சந்தீப் ரெட்டி வங்காவின் அனிமல் படம் தரமான படம் என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
டாக்டரா பார்க்கணும்: அனிமல் படம் நல்லா தானே இருக்கு என தமிழ் ரசிகர்கள் சிலர் தெரிவித்து வரும் நிலையில், நீ போய் அப்போ டாக்டரை பார்க்கணும் என மீம் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். தங்களுக்கு பிடித்த நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது படத்தை படமாக பார்க்க வேண்டும் என சொல்லும் ரசிகர்கள் அனிமல் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுப்பது சரியில்லை எனக் கூறி வரும் ரசிகர்களும் உலாவி வருகின்றனர்.

நெல்சன் ஹேப்பி: அனிமல் படத்தை நல்லா இருக்குன்னு சொல்றவங்களை எல்லாம் டாக்டரை பாருங்க என கலாய்த்து வரும் நிலையில், டோலிவுட் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் இதை விட சிறப்பா இருக்கா என அந்த படத்தை பார்க்கத் தொடங்கி விட்டனர் என நெல்சனை வைத்து போட்டுள்ள தரமான மீம் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











