ஓடிடியில் வெளியான அண்ணாத்த… படக்குழு எடுத்த அதிரடி முடிவு !
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த'சற்று முன் சன் நெக்ஸ்ட் மட்டும் நெட்பிளிக்ஸ் ஆகிய இரண்டு ஓடிடியில் ரிலீசாகி உள்ளது.
அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸாகி மிகப் பெரிய அளவில் வசூலை குவித்தது.
திரையரங்கில் வெளியான 20 நாட்களிலேயே இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணாத்த
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தைத் தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு,லிவிங்ஸ்டன், பாண்டியராஜ் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடித்துள்ளனர்.

வரவேற்பை பெற்றது
அண்ணாத்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளி பண்டிகை அன்று நவம்பர் 4ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

வசூல் சாதனை
தல அஜீத் குமாரை வைத்து நான்கு படங்களை இயக்கிய சிறுத்தை சிவா முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'அண்ணாத்த' படத்தை இயக்கி இருந்தார். இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.142.05 கோடி அண்ணாத்த வசூல் செய்துள்ளதாகவும். கர்நாடகாவில் ரூ.11 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சன் நெக்ஸ்ட்,நெட்பிளிக்ஸ்
இந்நிலையில், அண்ணாத்த திரைப்படம் சற்று முன் சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய இரண்டு ஓடிடியில் ரிலீசாகி உள்ளது. இப்படம் திரையரங்கில் வெளியாகி 20 நாட்களே ஆன நிலையில் ஓடிடியில் வெளியாகி உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஓடிடியில்
சிம்புவின் மாநாடு திரைப்படத்திற்காக பல திரையரங்குகளில் அண்ணாத்த திரைப்படம் எடுக்கப்பட்டு விட்டதால் ஒடிடியில் வெளியாகி உள்ளது. அண்ணாத்த வெளியான முதல்வாரம் திரையரங்குகளில் கூட்டம் குவிந்தாலும், அடுத்த வாரம் கனமழை பெய்ததால், திரையரங்குகளில் அவ்வளவாக கூட்டம் இல்லை. இதையடுத்து, இல்லத்தரசிகள் பலர் அண்ணாத்த திரைப்படத்தை வீட்டிலிருந்தே பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











