அண்ணாச்சின்னா சும்மாவா... லேட்டா வந்தாலும் தி லெஜெண்ட் தான் நம்பர் 1... ஓடிடி ஸ்ட்ரீமிங்கில் மாஸ்

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் புகழ் அண்ணாச்சி தி லெஜெண்ட் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

ஜேடி-ஜெர்ரி இயக்கிய 'தி லெஜண்ட்' திரைப்படம் கடந்தாண்டு ஜூலை 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறாத இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில், தி லெஜண்ட் கடந்த 3ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து லெஜெண்ட் அண்ணாச்சி போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

 அண்ணாச்சியின் மாஸ் அவதாரம்

அண்ணாச்சியின் மாஸ் அவதாரம்

சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் மூலம் மக்களிடம் பிரபலமானவர் லெஜெண்ட் அண்ணாச்சி. சரவணா ஸ்டோர்ஸ் குரூப் உரிமையாளர்களில் ஒருவரான அவர், தனது கடை விளம்பரங்களில் நடித்து அப்படியே சினிமாவிலும் ஹீரோவானார். அதன்படி, அவரே சொந்தமாக தயாரித்த தி லெஜண்ட் திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக தி லெஜண்ட் ட்ரெய்லர் 32 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்திருந்தது.

 ஹாட்ஸ்டார் ஓடிடியில் தி லெஜெண்ட்

ஹாட்ஸ்டார் ஓடிடியில் தி லெஜெண்ட்

அண்ணாச்சி ஹீரோவாக நடித்த தி லெஜெண்ட் திரைப்படத்தை ஜேடி - ஜெர்ரி இருவரும் இயக்கியிருந்தனர். லெஜெண்ட் அண்ணாச்சியுடன் ஊர்வசி ரவுத்தேலா, பிரபு, விவேக், விஜயக்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர், ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்நிலையில், தி லெஜண்ட் திரையரங்குகளைத் தொடர்ந்து தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. பல மாதங்களாக ஓடிடியில் வெளியாகாமல் இருந்த இந்தப் படம், கடந்த 3ம் தேதி முதலே ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

 எங்கும் முதலிடம் எப்போது முதலிடம்

எங்கும் முதலிடம் எப்போது முதலிடம்

தியேட்டர் ரிலீஸுக்குப் பிறகு தி லெஜண்ட் ஓடிடி ரைட்ஸ் பெறுவதற்காக பல ஆஃபர்கள் வந்தன என சமீபத்தில் ஜேடி - ஜெர்ரி கூறியிருந்தனர். இந்தப் படத்திற்கு திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், கலவையான விமர்சனங்களும், அண்ணாச்சியின் நம்பிக்கைக்கு பாராட்டுகளும் கிடைத்தன. இந்நிலையில், தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள தி லெஜெண்ட், ஓடிடி ஸ்ட்ரீமிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளதாக அண்ணாச்சி ட்வீட் போட்டுள்ளார். புதிய அத்தியாயம் தொடக்கம் என்ற கேப்ஷனுடன் ட்வீட் செய்துள்ளார்.

 அண்ணாச்சி ரசிகர்கள் கொண்டாட்டம்

அண்ணாச்சி ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்தப் படத்தில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பும் சயின்ட்டிஸ்ட்டாக நடித்திருந்தார் அண்ணாச்சி. ஆக்சன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் காட்சிகளிலும் மாஸ் காட்டியிருந்தார். பான் இந்தியா படமாக உருவான தி லெஜெண்ட், ஜூலை 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ஹீரோவாக நடித்த அண்ணாச்சியின் துணிச்சலை ரசிகர்கள் பாராட்டி இருந்தனர். இப்போது ஓடிடி ரசிகர்களும் அண்ணாச்சியை கொண்டாடி வருகின்றனர்.

 லியோவில் இணைகிறாரா லெஜெண்ட்?

லியோவில் இணைகிறாரா லெஜெண்ட்?

ரசிகர்களின் விருப்பத்திற்காகவே தி லெஜெண்ட் படத்தின் ஓடிடி ரைட்ஸை அண்ணாச்சி கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தனது ரசிகர்களுக்காக அண்ணாச்சி எடுத்துள்ள இந்த முடிவு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இன்னொரு பக்கம் விஜய்யின் லியோ படத்திலும் அண்ணாச்சி நடிப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. இது உண்மையா இல்லையா என்பது குறித்து படக்குழு தரப்பில் இருந்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X