அன்வெஷிப்பின் கண்டேதும்: டோவினோ தாமஸ் நடிப்பில் செம திரில்லர்.. அடிதடி இல்லாத சஸ்பென்ஸ் கதை

சென்னை: நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான அன்வெஷிப்பின் கண்டேதும் என்ற திரைப்படம் netflixe- இல் வெளியாகி இருக்கிறது. இதை திரைப்படத்தை பாக்கலாமா? வேண்டாமா? என்பதைப் பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். சமீபத்தில் மலையாள திரைப்படங்கள் மீது எல்லோருக்குமே ஒரு ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படமும் திரில்லர் வரிசையில் மக்களை கவர்ந்திருக்கிறது.

அதிகமாக அடிதடி சண்டை காட்சிகளும், ரத்தம் தெறிக்க தெறிக்க துப்பாக்கிச் சூடும் ஓசைகளும் இல்லாமல் ஒரு சைலண்டான திர்லர் மூவி தான் இது. இந்த திரைப்படத்தில் இரண்டு கதைகள் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. ஆனாலும் இதில் முக்கிய புள்ளியாக கதையின் நாயகன் ஆனந்த் நாராயணன் (டோமினோ தாமஸ்) இருக்கிறார்.

anweshippin kandethum movie review

கடந்த பிப்ரவரி மாதத்தில் திரையரங்குகளில் வெளியான அன்வெஷிப்பின் கண்டேதும் திரைப்படம் தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது. அதில் நெட் பிளிக்சில் இது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக ஆனந்த் நாராயணன் கேரக்டரில் டோவினோ தாமஸ் நடித்திருக்கிறார். சாதாரண ஒரு போலீஸ்காரர் தான் நேசிக்கும் வேலையில் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அவருக்கு வரும் பிரச்சனைகள் பற்றி தான் இந்த கதை பயணிக்கிறது.

இந்த திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே போலீஸ் அதிகாரி ஆனந்த் எஸ்பி அலுவலகத்தில் ஒரு பெஞ்சில் கலர் உடையில் முகத்தில் இருக்கத்தோடு அமர்ந்து இருக்கிறார். அப்போது அங்கு வரும் போலீஸ் நீங்க எப்போது டூட்டியில் ஜாயின் பண்ணுவீங்க சார்... நான் உங்க கூட வேலை பாக்குறதுக்கு காத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

anweshippin kandethum movie review

அதே நேரத்தில் அங்கிருக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் நல்லா பாத்துக்க இந்த ஆனந்த் மாதிரி மட்டும் நீ ஆகிடாத என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் என்ன நடந்திருக்கும் என்ற குழப்பம் எல்லோருக்கும் வரும். அந்த நேரத்தில் ஆனந்த் தன்னுடைய ஃப்ளாஷ்பேக்கை நினைத்துப் பார்க்கிறார். அப்போது லவ்லி என்ற ஒரு பெண்ணை காணவில்லை என்று அவருடைய தந்தை போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்கிறார்.

அவரை பற்றி விசாரிப்பதற்காக ஆனந்த் லவ்லி கிராமத்திற்கு போகிறார். அங்கே லவ்லி காலேஜிலிருந்து ஹால் டிக்கெட் வாங்கிட்டு வந்து பஸ்ஸில் இறங்கியது பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருந்த பெட்டிக்கடைக்காரர் சொல்கிறார். அப்போது அந்த இடத்தில் நின்று பார்க்கும் ஆனந்திற்கு லவ்லி பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்து போனது போன்ற நிகழ்வுகள் கண் முன்பு தெரிகிறது.

அப்போது அந்த பெட்டி கடைக்காரரிடம் ஆனந்த், லவ்லி இங்கிருந்து போகும்போது யாராவது அவளை பாலோ பண்ணுனாங்களா? என்று விசாரிக்க ஆமா ரெண்டு பசங்க இங்க நின்னாங்க என்று அவர் சொல்கிறார்.

anweshippin kandethum movie review

அந்த பசங்களை பற்றி விசாரிக்கும் போது அவர்கள் அங்கிருக்கும் ஒரு கல்லூரியில் படிக்கிறார்கள் என்று தெரியவர அந்த பசங்களை பிடித்துக்கொண்டு வந்து போலீஸ் ஸ்டேஷனில் விசாரிக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் நாங்கள் லவ்லி இடம் தகராறு செய்தது உண்மைதான் ஆனால் அந்த நேரத்தில் அங்கு ஒரு மீன்காரர் வந்ததும் நாங்கள் லவ்லியை விட்டு விட்டோம். லவ்லி நடந்து போனதை மீன்காரர் பார்த்தார் என்று சொல்கின்றனர். பிறகு மீன்காரரிடம் விசாரணை போகிறது. அவரும் நானும் பார்த்தேன் லவ்லி அந்த பசங்களை தாண்டி நடந்து போனா என்று சொல்ல அதைத் தொடர்ந்து போலீஸ் ஆனந்த் தலைமையில் லவ்லியின் வீட்டில் விசாரிக்கின்றனர்.

அப்போது லவ்லியின் வீட்டில் இருந்தவர்கள் லவ்லி அந்த ஊரில் இருக்கும் சர்ச் பாதர் இடம் ஹால் டிக்கெட் வந்ததும் ஆசிர்வாதமாக வேண்டும் என்று சொல்லிட்டு இருந்தா.. அங்கே தான் போயிருப்பா என்று சொல்கின்றனர். இதனால் ஆனந்த் அந்த சர்ச் பாதரை விசாரிக்கணும் என்று முடிவு எடுக்கிறார். ஆனால் அவரோடு இருந்த போலீஸ்காரர் வேண்டாம் இது பெரிய தப்பா போய்விடும்.

இந்த ஊரில் சர்ச் பாதருக்கு பெரிய அளவில் மரியாதை இருக்கிறது அவரை போலீஸ் விசாரிக்கிறது என்றால் ஊர்காரர்கள் கொந்தளித்து விடுவார்கள் என்று அட்வைஸ் செய்கிறார். அதே நேரத்தில் லவ்லி அப்பாவுக்கும் அந்த பாதர் அணியினருக்கும் பிரச்சனை இருக்கிறது. அதனால் லவ்லியின் அப்பா வேண்டும் என்று தான் சர்ச் பாதர் மீது குற்றம் சுமத்துகிறார் என்றும் அந்த போலீஸ்காரர் சொல்ல, அதையும் மீறி ஆனந்த் சர்ச் பாதரை விசாரிக்க போக அங்கு ஊர்காரர்கள் எல்லோரும் கூடி ஆனந்த் மற்றும் கூட வந்த போலீஸ்காரர்களை அடித்து உள்ளே விடாமல் தடுக்கிறார்கள்.

அந்த நேரத்தில் இன்ஸ்பெக்டர் மற்றும் இன்னொரு போலீஸ் ஆபீஸர் அங்கே வந்து ஆனந்தை காப்பாற்றி கூட்டிட்டு வருகின்றனர். அதோடு இனிமே இந்த கேசில் இனி தலையிடக்கூடாது என்று மிரட்டுகிறார்கள். பிறகு ஆனந்த் வெளியே போனதும் இந்த கேசில் நம்ம இரண்டு கிறிஸ்தவர்களையும் ஸ்பெஷலாக போட்டு இருப்பது பிரச்சனை பெருசாக கூடாது என்பதற்காகத்தான் அதனால் இனி ஆனந்த் இந்த கேசியில் தலையிடக்கூடாது என்று அவர்கள் இருவரும் பிளான் போடுகின்றனர்.

அந்த நேரத்தில் லவ்லி ஒரு கிணற்றுக்குள் சடலமாக கிடப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. பிறகு ஆனந்த் இன்ஸ்பெக்டர் தடுத்த பிறகும் அவருக்கே தெரியாமல் குற்றம் செய்தது யார் என்பதை கண்டுபிடிக்கிறார். ஆரம்பத்தில் இந்த கேசியில் கண்டுபிடிக்கும் ஒவ்வொருவரும் இவர்கள்தான் லவ்லியை கொலை செய்து இருப்பார்களோ.. என்று நினைக்க வைத்து பிறகு இல்லை என்று சொல்லிவிடுகிறார்கள்.

கடைசியில் பாஸ்டர் வீட்டிற்கு லவ்லி போனது உண்மை என்று தெரிய வருகிறது. தக்க ஆதாரத்தோடு எஸ்பி இடம் ஆனந்த் ஒப்படைக்கிறார்.

ஆனந்த் மற்றும் அவருடன் இருந்த போலீஸ் காரர்களும் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள். இது பிளாஷ்பேக் ஆக இருக்கிறது.

அதைத் தொடர்ந்து அந்த ஃப்ளாஷ் பேக் முடிவடைந்ததும் ஆனந்த் நாராயணனை எஸ்பி கூப்பிட்டு நீ செய்த தவறை திருத்திக் கொள்வதற்கு உனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஸ்ரீதேவி என்ற ஒரு பெண்ணின் கொலை வழக்கை கண்டுபிடித்தால் உன் மீது இருக்கும் பிளாக் மார்க்மாறிவிடும் என்று ஒரு வாய்ப்பு கொடுக்க அதை பயன்படுத்திக் கொண்டு ஆனந்த் நாராயணனும் அவரோடு நான்கு போலீஸ்காரர்களும் குறிப்பிட்ட அந்த ஊருக்கு வருகின்றனர்.

அங்கு ஏற்கனவே ஸ்ரீதேவி கேசை கண்டுபிடிக்கிறேன் என்கிற பெயரில் போலீஸ்காரர்கள் மற்றும் ஸ்பெஷல் டீம் என எல்லோரும் அந்த ஊர் மக்களை பாடாய்படுத்தி எடுத்து இருக்கின்றனர். இதனால் ஊர் மக்கள் புதியதாக வரும் ஆனந்த் குழுவினருக்கு எந்த உதவிகளும் செய்யக்கூடாது என்று இவர்கள் ஊருக்குள் நுழையும் போதே மேடை போட்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு எப்படி அந்த கேசை கண்டுபிடித்தார்கள் என்பதுதான் மீதமுள்ள கதை.

இரண்டு கதைக்கு வித்தியாசங்கள் அதிகமாக இருந்தாலும் அதில் ஆனந்த் நாராயணனின் கண்டுபிடிக்கும் திறன் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது. இது பெரிய அளவில் மற்ற திரைப்படங்களை விட வித்தியாசம் இல்லை என்றாலும் துப்பாக்கி சத்தம் இல்லாமல் பெரிய அளவில் பில்டப் இல்லாமல் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்ப்போடு இந்த திரைப்படம் நகர்ந்து இருக்கிறது. சஸ்பென்ஸ் விரும்பிகளுக்கு இந்த திரைப்படம் ஒரு பெஸ்ட் ஆக இருக்கும்.

இயக்குனர்: டார்வின் சூரியகோஸ்

எழுத்தாளர்: ஜினு ஆபிரகாம்

நடிகர்கள்: டோவினோ தாமஸ், சித்திக், இந்திரன்ஸ், ஜாபர் இடுக்கி, பிரமோத், வெள்ளியானந்த், அர்த்தனா பினு, பாபுராஜ், வினீத் தட்டில் டேவிட்,

நேரம்: இரண்டு மணி 25 நிமிடங்கள்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X