This Week OTT Release: இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட்!
சென்னை: சினிமா ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக வந்துள்ளது தான் ஓடிடி தளங்கள். வாரம் தோறும் புதுபுது படங்கள், வெப் தொடர்கள் என வாரா வாரம் திருவிழாப்போல பல்வேறு ஓடிடி தளங்களில் பல படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது பல திரைப்படங்கள் இந்த வார வெளியாக உள்ளன. அவை என்ன என்பதை பார்க்கலாம்.
வடம்: விமல், நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ, பாலசரவணன், முனீஸ்காந்த், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்த திரைப்படம் வடம். இயக்குநர் இயக்குநர் கேந்திரன் முனியசாமி இயக்கிய இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த மாதம் மார்ச் 3ந் தேதி தியேட்டரில் வெளியான நிலையில் தற்போது இந்த படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 3ந் தேதி வெளியாக உள்ளது.

மிருத்யுஞ்சய்: ஸ்ரீ விஷ்ணு நடிப்பில் உருவான 'மிருத்யுஞ்சய்' திரைப்படம் கடந்த மாதம் மார்ச் 6ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஸ்ரீ ஹுசைன் ஷா கிரண் எழுதி இயக்கிய ஆக்ஷன், த்ரில்லர் திரைப்படமான இப்படத்தில், ஸ்ரீ விஷ்ணு லீட்ரோலில் நடிக்க ரெபா மோனிகா ஜான், பேபி உஹா, சுதர்ஷன், ரச்சா ரவி, ஐயப்பா, சிஜ்ஜு மற்றும் ஐஸ்வ் ஆகியோர் நடித்துள்ளனர். கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படம் ஏப்ரல் 3ந் தேதி Netflix தளத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.
Sampradayini Suppini Suddapoosani : சிவாஜி மற்றும் லயா நடிப்பில் உருவான 'Sampradayini Suppini Suddapoosani' தெலுங்கு திரைப்படம், கடந்த மாதம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற, குடும்ப, நகைச்சுவை படம் ஏப்ரல் 3ந் தேதி முதல் Netflix தளத்தில் பார்க்கலாம்.
Velleppam: மலையாளக் காதல் மற்றும் நகைச்சுவை படம் 'Velleppam'. அக்ஷய் ராதாகிருஷ்ணன், நூரின் ஷெரீஃப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை பிரவீண் ராஜ் பூக்காடன் இயக்கியுள்ளார். நல்ல விமர்சனத்தை பெற்ற இப்படம், சன் நெக்ட் தளத்தில் ஏப்ரல் 3ந் தேதி அதாவது வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

Killer Whale: ஜோ-ஆன் ப்ரெச்சின் இயக்கிய சர்வைவல் த்ரில்லர் படம் 'Killer Whale'. விர்ஜினியா கார்ட்னர், மெல் ஜார்ன்சன் மற்றும் மிட்செல் ஹோப் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் ஜனவரி மாதம் திரையரங்கில் வெளியானது. பழிவாங்கும் நோக்கத்துடன் ஒரு திமிங்கலம் கடலில் சிக்கிக் கொண்ட இரண்டு தோழிகளை பின் தொடர்கிறது. இதில் இருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதை இந்த படம் சுவாரசியமாக காட்டி உள்ளது. இந்த படம் தற்போது Lions Gate Play ஓடிடி தளத்தில் ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கில் ஏப்ரல் 3ந் தேதி முதல் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











