Aranmanai 4 OTT: ஓடிடி ரசிகர்களை கடுப்பாக்கிய சுந்தர் சி.. அரண்மனை 4 எப்போ ஸ்ட்ரீம் ஆகுது தெரியுமா?
சென்னை: சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதன் ஓடிடி ரிலீஸ் ஒரேயடியாக தள்ளிப் போய் ஓடிடி ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
அரண்மனை 4 படத்தை பலர் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று பார்த்தாலும் ஓவர்சீஸ் ரசிகர்கள் மற்றும் ரிப்பீட் ஆடியன்ஸ் அந்த படத்தை ஓடிடியில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். 4 வார விண்டோவில் புதிய படங்கள் ஓடிடிக்கு வந்து விடும் நிலையில், அரண்மனை 4 இன்னமும் வெளியாகவில்லை.

இந்நிலையில், தற்போது அதன் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதை பார்த்து ரசிகர்கள் சந்தோஷம் அடையாமல் கடுப்பாகி உள்ளனர். அந்தளவுக்கு தாமதமாக அரண்மனை 4 ஓடிடியில் வெளியாக போகிறது.
சுந்தர் சிக்கு ஒருவழியா வெற்றி: அரண்மனை 3 திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில் அரண்மனை 4 படத்தை சுந்தர் சி ஆரம்பிக்கும்போதே ரசிகர்கள் கலாய்க்க தொடங்கினர். சுந்தர் சிக்கு மற்றும் ஒரு ஃபிளாப் பார்சல் என கிண்டல் செய்தனர். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கடுமையாக உழைத்த சுந்தர் சி தரமான சிஜி காட்சிகளுடன் தமன்னாவின் தாறுமாறான நடிப்பை வெளியே கொண்டு வந்து அரண்மனை4 படத்தை வெற்றிப் படமாக மாற்றி விட்டார்.
100 கோடி கிளப்: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான பல படங்கள் சொதப்பின. எந்தவொரு படமும் 100 கோடி வசூலை தொடாத நிலையில்,தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு முதல் 100 கோடி படமாக அரண்மனை 4 மாறியது. தமன்னாவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில், வில்லனாக நடித்த கேஜிஎஃப் ராமசந்திரா ராஜுவும் நடிப்பில் அசத்தினார். இருவருக்கும் இடையே நடைபெறும் அந்த கிளைமேக்ஸ் சண்டை டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் சண்டையுடன் ஒப்பிடப்பட்டது.
டிஸ்னி ஹாட்ஸ்டார்: சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும், விரைவில் அந்த படம் வெளியாகும் என புதிய போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டது. அரண்மனை 4 தேர்தல் முடிவுகள் வெளியானதும் வெளியாகும் என எதிர்பார்த்தனர். மே 3ம் தேதி படம் வெளியான நிலையில், ஜூன் 3ம் தேதியே படத்தை ஓடிடி ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கினர். ஆனால், தொடர்ந்து பல வாரங்களாக தியேட்டரில் வெற்றிகரமாக அந்த படம் ஓடி வருவதால் மேலும், சில வாரங்கள் தாமதமாக வெளியாகப் போவதாக தற்போது அறிவிப்பு வெளியாகி இ ருக்கிறது.
இந்த தேதியில் தான் ரிலீஸ்: வரும் ஜூன் 21ம் தேதி தான் அரண்மனை 4 திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இது ரொம்ப லேட் என்றும் இன்னும் 2 வாரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டுமா என ஓடிடி ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர்.
ஸ்டார் வருமா?: இளன் இயக்கத்தில் கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் மே 10ம் தேதி வெளியான நிலையில், அந்த படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார இறுதியில் ஸ்டார் திரைப்படம் ஜூன் 7ம் தேதி வெளியாக அதிக வாய்பு இருப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











