OTT Tamil Movies This Week: இந்த வாரம் தாறுமாறு.. ஓடிடி-யில் வெளியான ஹிட் படங்கள்.. லிஸ்ட் இதோ!

சென்னை: முன்பெல்லாம் வெள்ளிக்கிழமை என்றாலே புது புது படங்கள் தியேட்டரில் வெளியாகும். அதை பார்ப்பதற்கு என்றே சினிமா பிரியர்கள் தியேட்டர் வாசலில் காத்திருப்பார்கள். ஆனால், தற்போது ஓடிடி தளங்களில் தியேட்டரில் புது திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது போல, ஓடிடியில் ஏராளமான திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது (ott tamil release this week).

பிரபல நடிகர்களின் படங்கள் முதல் இளம் நடிகர்களின் படங்கள் வரை அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், ஆஹா, நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார், ஜியோ சினிமா போன்ற ஓடிடி தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு படங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று என்னென்ன படம் வெளியாகி உள்ளது என்று பார்க்கலாம்.

Aranmanai 4 rasavathi OTT

ரசாவதி: மௌனகுரு, மகாமுனி என்ற வெற்றிப்படத்தை இயக்கிய தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக மாறிய இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தான் ரசவாதி. க்ரைம், ரொமான்டிக், த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள அர்ஜுன் தாஸ்,ரம்யா சுப்ரமணியம் , ரிஷிகாந்த், தான்யா,ஜிஎம் சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படத்தை அமேசான் ப்ரைம், ஆஹா தமிழ் என இரண்டு ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது.

அரண்மனை 4: அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து உருவான திரைப்படம் அரண்மனை 4 . சுந்தர் சி இயக்கத்தில் உருவான இப்படத்தில், தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, விடிவி கணேஷ் என தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மே 3ஆம் தேதி வெளியான இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் இன்று வெளியாகி உள்ளது.

கம் கணேஷா: பேபி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆனந்த் தேவரகொண்டா நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம் கம் கணேஷா. உதய் பொம்மிசெட்டி இயக்கிய இப்படத்தில் பிரகதி, ஸ்ரீவஸ்தவா, நயன் சரிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த மாதம் 31-ந் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படம் இன்று அமேசான் பிரைம் வீடியோவில் இன்று வெளியாகி உள்ளது.

குரங்கு பெடல்: அதே போல, இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் சந்தோஷ் வேல்முருகன் நடிப்பில் வெளியான திரைப்படம் குரங்கு பெடல். சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும் ஐந்து சிறுவர்கள் செய்யும் சுட்டிதனம் தான் இந்த திரைப்படத்தின் கதைகளம். கடந்த மே மாதம் 3 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை தியேட்டரில் பார்க்க தவறியவர்கள் ஆஹா ஓடிடி தளத்தில் பார்க்கலாம். இப்படம் அந்த ஓடிடி தளத்தில் ஜூன் 14 ஆம் தேதி வெளியானது.

உயிர் தமிழுக்கு: ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கிய படம்தான், "உயிர் தமிழுக்கு." இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் கதைக்களத்தை கொண்ட இப்படத்தில்,அமீர் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரனும், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணிய சிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மே 10ந் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படத்தை ஜூன் 24 ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

பிடி சார்: ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில், கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்த திரைப்படம் பிடி சார். இதில், அனிகா, காஷ்மீரா, பிரபு, பாண்டியராஜன், பாக்கியராஜ், தியாகராஜன், இளவரசு, தேவதர்ஷினி, பட்டிமன்றம் ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில், இன்று அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X