Con City OTT: 25 நாளை கடந்த கான் சிட்டி.. ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. ஸ்கேம் பண்ண வராங்க!
சென்னை: அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி நடிப்பில் உருவாகி கடந்த ஜூன் 26ம் தேதி வெளியான கான் சிட்டி திரைப்படம் இன்றுடன் 25 நாட்களை திரையரங்குகளில் வெற்றிகரமாக கடந்துள்ளது. ஹீரோவாக அர்ஜுன் தாஸுக்கு ஒரு சூப்பரான படமாகவே கான் சிட்டி அமைந்துள்ளது.
ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் ஏகப்பட்ட மோசடிக்காரர்கள் ஒரு குடும்பமாக மாறி ஒரு பெரிய ஸ்கேமை செய்வது தான் படத்தின் கதை. ஆனால், அவர்கள் அந்த மோசடியை ஏன் செய்கின்றனர். அவர்களை செய்யத் தூண்டுவது யாரு? கடைசியில் என்ன ஆனது என்கிற பக்காவான காமெடி ஸ்க்ரிப்ட் உடன் ரசிகர்களை சிரிக்க வைக்கும் விதமாக இந்த படம் உருவாகியுள்ளது.

தியேட்டரில் படத்தை மிஸ் செய்தவர்கள் இந்த வாரம் ஓடிடியில் கான் சிட்டி படத்தைக் குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் வகையில் வெளியாக காத்திருக்கிறது.
லக்கி பாஸ்கர் ஸ்டைலில்: துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படம் வங்கி ஊழியர் எப்படி மக்கள் பணத்தை எடுத்து ஸ்கேம் செய்து கோடீஸ்வரர் ஆனார் என்கிற கதையை படமாக்கி 100 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இந்நிலையில், அதே ரூட்டில் மின் வாரியத்தில் வேலை செய்யும் ஹீரோ மக்கள் கட்டும் EB பில்லை எப்படி மோசடி செய்து அதை டபுள் ஆக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் என்றும் அவரை போலவே ஸ்கேம் செய்யும் ஆட்கள் அவருடன் ஏன் இணைகின்றனர். எல்லாருமே குடும்பமா சேர்ந்து ஒரு மிகப்பெரிய ஸ்கேமை எப்படி செய்கின்றனர் என்கிற கதை தான் இந்த கான் சிட்டி.
25வது நாள்: ஒரு வாரம் புதிய படங்கள் ஓடுவதே பெரிய விஷயமாக உள்ளது. கான் சிட்டி திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிய நம்பர்ஸ் எடுக்கவில்லை என்றாலும், படத்தின் பட்ஜெட்டை விட நல்லாவே லாபத்தை ஈட்டியுள்ளது என்கின்றனர். மேலும், இன்றுடன் 25வது நாளை கடந்து தியேட்டர்களில் பல படங்களுக்கு நடுவே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
நெட்பிளிக்ஸ் ரசிகர்களே ரெடியா?: இந்த வாரம் ஜன நாயகன் படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் தாராளமாக ஓடிடியில் கான் சிட்டியை கண்டு ரசிக்கலாம். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜூலை 24ம் தேதி கான் சிட்டி திரைப்படம் ஸ்ட்ரீம் ஆகிறது.


Click it and Unblock the Notifications