இரும்பிலே ஒரு இருதயம்.. இதயத்தில் பிரச்சனை.. 76 வயது அர்னால்டுக்கு பொருத்தப்பட்ட பேஸ்மேக்கர்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: இதயத் துடிப்பு சீராக இல்லை என்றால் செயற்கையாக பேஸ் மேக்கர் மூலமாக இதயத்துடிப்பை சீர் செய்ய தேவையான மின்சாரத்தை பாய்ச்சும் முறை தான் பேஸ் மேக்கர் சிகிச்சை என சொல்லப்படுகிறது. உலகளவில் இளைஞர்கள் ஜிம்முக்கு செல்ல காரணமே அர்னால்டு தான்.
இந்தியாவில் இன்னமும் பல ஜிம்களுக்கு அர்னால்டு ஜிம் என்றே பெயர் வைத்து வருகின்றனர். ஒரு நாள் ஜிம்முக்கு சென்றதும் அர்னால்டு மாதிரி ஆக முடியாது என கிண்டலும் கேலியும் செய்யவும் அர்னால்டு பெயரை பயன்படுத்தி வருகின்றனர்.

டெர்மினேட்டர் படங்கள் மூலம் உலகளவில் பிரபலமான அர்னால்டுக்கு தற்போது 76 வயதாகிறது. பேஸ் மேக்கர் சிகிச்சை மேற்கொண்டுள்ள அவர் அதுகுறித்தும் ஜோக் அடித்துள்ளார்.
அர்னால்டுக்கு அறுவை சிகிச்சை: 40 வயதானாலே இப்போதெல்லாம் மாரடைப்பு உள்ளிட்ட ஏகப்பட்ட பிரச்சனைகள் தாக்குகின்றன. 76 வயதாகும் அர்னால்டு இந்த வயதிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில், இளமை காலத்தில் இருந்து அவர் செய்த ஏகப்பட்ட வொர்க்கவுட்கள், ஸ்டன்ட்டுகள் என செய்து வந்த அவருக்கு தற்போது இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டு இருக்கிறது.
மெஷின் ஆகிட்டு வரேன்: ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் வெளியான டெர்மினேட்டர் படத்தில் ரோபோவாக நடித்து எந்திரன் படத்துக்கு எல்லாம் முன்னோடியாக இருந்தவர் அர்னால்டு தான். 2.0 படத்தில் அர்னால்டை அக்ஷய் குமார் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஷங்கர் திட்டமிட்டார். ஆனால், அவருக்கே 100 கோடி சம்பளம் என்றதும், அக்ஷய் குமார் பக்கம் தாவி விட்டார். ரோபோவாக நடித்து வந்த அர்னால்டு பேஸ் மேக்கர் சிகிச்சைக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மெஷினாக மாறி வருகிறேன் என ஜோக் அடித்துள்ளார்.
Fubar Season 2 தாமதமாகாது: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அர்னால்டு நடிப்பில் உருவான Fubar Season 1 மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அதன் இரண்டாம் சீசனில் நடித்து வரும் நிலையில், அர்னால்டுக்கு பேஸ் மேக்கர் சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அந்த சீசன் இனிமேல் வராது என ஹாலிவுட்டில் ட்ரோல்கள் பறந்தன. இந்நிலையில், அதெல்லாம் இல்லை, இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த சீசன் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் சில வாரங்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் நடிப்பேன் என்றும் அர்னால்டு உறுதியளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











