Demonte Colony 2 OTT: வசூலை அள்ளும் டிமான்டி காலனி 2.. ஓடிடியில் எப்போது பார்க்கலாம்!
சென்னை: இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'டிமான்டி காலனி' பாகம் 2 ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
2015ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் 'டிமான்ட்டி காலனி' அதிரடியான திகில் லூட்டும் திரைப்படமான இப்படத்தை மு.க.தமிழரசு தயாரித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதில் ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தார். ஒரே ஒரு இரவில் வீட்டிற்குள் நடக்கும் பேயின் அட்டகாசம் ரசிகர்களுக்கு திகிலூட்டியது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து,7 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார்.

டிமான்டி காலனி 2: அஜய் ஞானமுத்து விக்ரமனை வைத்து கோப்ரா படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் தோல்வியைத் தழுவி அடைந்ததை அடுத்து, டிமான்டி காலனி 2 படத்தை இயக்கி இருந்தார். இதில் அருள்நிதி, அருண் பாண்டியன், பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவி சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைத்து இருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை 1.50 கோடி வசூலித்த நிலையில், சனிக்கிழமை ஆச்சரியமாக படத்தின் வசூலானது 60 சதவீதம் அளவுக்கு உயர்ந்து, 2.40 கோடி ரூபாயாக உள்ளது.
படத்தின் கதை: முதல் படத்தின் கதை ஒரு சிறிய வீட்டினுள் நடக்கும். இரண்டாம் பாகத்தின் கதை ஒரு சைனீஸ் உணவகத்தினுள் நடக்கிறது. இதில், பிரியா பவானி சங்கர் தனது கணவனை இழந்த துயரில் இருக்கிறார். அவரது துயர் தாங்க முடியாததாகி, அதுவே அவரை ஆட்டிப் படைக்கிறது. இறந்த கணவரின் பதப்படுத்திய விந்தணுவைப் பயன்படுத்தி, கருவுற நினைக்கிறார். முதல் படத்தில் இறந்துபோன அருள்நிதி. இரண்டாம் பாகத்தில் இரட்டைச் சகோதரர் ரகு இருப்பதாகக் காட்டப்படுகிறது. அந்த தங்கச் சங்கிலி மீண்டும் திருடப்பட்டு, பேய் மீண்டும் கிளம்புகிறது. அதன் பின் என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை.
ஓடிடி ரிலீஸ்: பலரின் பாராட்டை பெற்று வரும் இந்த படத்தின், ஓடிடி உரிமையை ஜி5 ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. இதற்கிடையே செப்டம்பர் மாத இறுதியில் டிமான்டி காலனி 2 ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை


Click it and Unblock the Notifications











