OTT: அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?.. எந்த பிளாட்ஃபார்மில் வருது?

சென்னை: மதராசப்பட்டினம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு டைட்டானிக் அனுபவத்தை கொடுத்த இயக்குநர் ஏ.எல். விஜய் இங்கிலாந்தில் இருந்து நடிகை எமி ஜாக்சனையும் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார். அந்த படத்தைத் தொடர்ந்து பல ஹாலிவுட் படங்களின் பாதிப்பைக் கொண்டு தமிழில் தொடர்ந்து படங்களை இயக்கி வந்தார் ஏ.எல். விஜய்.

சியான் விக்ரம், அனுஷ்கா, அமலா பால் நடித்த தெய்வத் திருமகள் படம் ரசிகர்களை கவர்ந்த நிலையில், அடுத்து விஜய்யை வைத்து தலைவா படத்தையும் இயக்கினார். அதில், அமலா பால் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Arun Vijay and Amy Jackson starrer Mission Chapter 1 will soon stream on Simply South OTT platform

ஆனால், அந்த படம் அவருக்கு சரியாக போகவில்லை. தொடர்ந்து ஏ.எல். விஜய் இயக்கி வந்த படங்கள் ஃபிளாப் ஆக தொடங்கிய நிலையில், மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என எமி ஜாக்சனை அழைத்து வந்து அருண் விஜய்யை வைத்து அவர் இயக்கிய படம் தான் மிஷன் சாப்டர் 1.

பொங்கல் போட்டி: தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் என இரு பெரும் போட்டிக்கு நடுவே தில்லாக அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 படமும் வெளியானது. ஆனால், அதிகப்படியான திரையரங்குகள் கிடைக்காத நிலையில், அந்த படத்திற்கான வசூல் பாதித்தது. படம் தியேட்டரில் வெளியான ஃபீலிங்கே இல்லை என அருண் விஜய் பேசியிருந்தார். ஆனால், படத்துக்கு விமர்சன ரீதியாக பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்த நிலையில், ஓடிடியில் அந்த படத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் பலரும் காத்துக் கிடக்கின்றனர்.

ஓடிடியில் வருது: லைகா தயாரிப்பில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், லியோ படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த இயல் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஜனவரி 12ம் தேதி வெளியான மிஷன் சாப்டர் 1 திரைப்படம் சிம்ப்ளி சவுத் எனும் ஓடிடியில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் வெளியாகப் போவதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதிகபட்சமாக வரும் மார்ச் 15ம் தேதி மிஷன் சாப்டர் 1 திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என தெரிகிறது.

Arun Vijay and Amy Jackson starrer Mission Chapter 1 will soon stream on Simply South OTT platform

இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம்: சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில், இந்தியாவை தவிர உலகின் மற்ற நாடுகளில் உள்ள தமிழ் ரசிகர்கள் இந்த படத்தை கண்டு ரசிக்க முடியும். இந்தியாவில் இன்னமும் எந்த ஓடிடி நிறுவனம் இந்த படத்தை வாங்கி வெளியிடப் போகிறது என்கிற அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X