மிரட்டலான அரண்மனை 3 படம்... இன்று ஓடிடியில் ரிலீஸ்!
சென்னை : நடிகர் ஆர்யா, ஆன்ட்ரியா, ராஷி கண்ணா, சுந்தர் சி உள்ளிட்டவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அரண்மனை 3.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்தப்படம் இன்றைய தினம் ஓடிடியில் ரிலீசாகியுள்ளது.

அரண்மனை 3 படம்
நடிகர் ஆர்யா சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்கு பிறகு நடித்து ரிலீசான படம் அரண்மனை 3. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதன் 3வது பாகம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.

சிறப்பான வெற்றி
இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் வசூல்ரீதியாக சிறந்த வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் மறைந்த காமெடி நடிகர் விவேக் நடித்திருந்தது படத்திற்கு கூடுதல் வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. மேலும் படத்தில் யோகிபாபு, மனோபாலா உள்ளிட்ட காமெடி நடிகர்களும் இடம்பெற்றிருந்தனர்.

காமெடிக்கு முக்கியத்துவம்
முந்தைய பாகங்களை போல இல்லாமல் இந்த 3வது பாகம் காமெடிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது. சுந்தர் சி வழக்கம் போல பேயை கண்டுபிடிக்கும் நபராக இந்தப் படத்திலும் நடித்திருந்தது விமர்சனத்திற்கு உள்ளானது.

ஓடிடியில் ரிலீஸ்
இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகி வசூல்மழையை பொழிந்துள்ள நிலையில் தற்போது ஓடிடியிலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஜீ 5 நிறுவனம் இதன் ஓடிடி உரிமையை பெற்றுள்ள நிலையில், இன்றைய தினம் படம் ரிலீஸ் செய்யப்ட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கூடுதல் வரவேற்பை பெற்றுள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி
திரையரங்குகளில் படத்தை பார்க்க முடியாதவர்கள் தற்போது ஓடிடியில் பார்த்துக் கொள்ளும் வசதி உள்ளதால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் வீட்டில் அனைவரும் இணைந்து இந்தப் படத்தை பார்க்கும் வசதியும் உள்ளது.

சுந்தர் சி இயக்கம்
முன்னதாக அடுத்தடுத்த பாகங்களை எடுப்பது சவாலானது என்று இயக்குநர் சுந்தர் சி தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஒரு படத்தின் மூன்று பாகங்களை அடுத்தடுத்து உருவாக்கி அதை வெற்றி பெற வைத்துள்ளார். மேலும் அதிகமான நட்சத்திரங்களை வைத்து வேலை வாங்குவதும் அவரது சிறப்பான திறமைகளில் ஒன்றாக உள்ளது.


Click it and Unblock the Notifications











