OTT: ஓடிடியில் வெளியானது அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார்.. எந்த எந்த பிளாட்ஃபாரத்தில் தெரியுமா?

சென்னை: பா. ரஞ்சித் தயாரிப்பில் அவரது நண்பர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, பிரித்விராஜ் பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் இந்த மாத இறுதியில் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

கிரிக்கெட் மற்றும் உள்ளூர் அரசியலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் தான் இந்த ப்ளூ ஸ்டார். தியேட்டர்களில் வெளியாகி வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் தற்போது ஓடிடி ரசிகர்களின் பார்வைக்காக ரிலீஸ் ஆகியிருக்கிறது.

Ashok Selvans Blue Star movie streaming on OTT now

விமர்சன ரீதியாக வெற்றி: இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களிலேயே ப்ளூ ஸ்டார் படம் நன்றாக இருப்பதாக பல விமர்சகர்கள் இந்த படத்தை பாராட்டினர். அதே போல பட்ஜெட்டை விட போதுமான வசூலையும் இந்த படம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் 50 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தது போல ப்ளூ ஸ்டார் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் அந்தளவுக்கு பெரிதாக ஓடவில்லை.

ஓடிடியில் ரிலீஸ்: இந்திய ரசிகர்கள் இந்த படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று முதல் காணலாம். காலை முதலே பலர் ஓடிடியில் ப்ளூ ஸ்டார் படத்தை போட்டு பார்த்து வருகின்றனர். வெளிநாட்டில் உள்ள ரசிகர்கள் டென்ட்கொட்டா மற்றும் சிம்ப்ளி சவுத் உள்ளிட்ட ஓடிடியில் ப்ளூ ஸ்டார் படத்தை கண்டு ரசிக்கலாம்.

கிரிக்கெட் படம்: பா. ரஞ்சித் இயக்கும் படங்களும் தயாரிக்கும் படங்களும் கண்டிப்பாக அரசியல் பேசும் படமாகவே இருக்கும். இந்த படமும் அரசியல் மற்றும் கிரிக்கெட் விளையாட்டை பற்றி பேசுகிறது. இந்த படம் முதலில் வந்தது தான் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

வாரிசு நடிகர்கள்: ப்ளூ ஸ்டார் படத்தில் பாக்கியராஜின் மகன் சாந்தனு, அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் மற்றூம் பாண்டியராஜனின் மகன் பிரித்விராஜ் என பல வாரிசு நடிகர்கள் நடித்துள்ளனர் என்பதும் குறீப்பிடத்தக்கது. வாரிசு நடிகர்கள் சங்கமாக உருவாகி உள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் ஓடிடி ரசிகர்களை எந்தளவுக்கு கவரப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X