அட்லி - ஷாருக்கானின் ஜவான்.. டிஜிட்டல் உரிமத்தை பெரிய தொகைக்கு கைப்பற்றிய பிரபல ஓடிடி தளம்!

மும்பை: கடந்த 4 ஆண்டுகளாக ஒரு படத்தை கூட ரிலீஸ் செய்யாமல் இருக்கும் நடிகர் ஷாருக்கான், அடுத்தடுத்து 3 படங்களில் நடித்து வருகிறார்.

Recommended Video

Nayanthara – Vignesh Shivan திருமணத்தில் கலந்துகொண்ட முக்கிய பிரபலங்கள் #Celebrity | Filmibeat Tamil

அடுத்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் பதான், ஜவான் மற்றும் டன்கி என 3 படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்து வரும் ஜவான் படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றி உள்ளது.

ஜீரோ தோல்விக்கு பிறகு

ஜீரோ தோல்விக்கு பிறகு

இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஷாருக்கான், கத்ரீனா கைஃப், அனுஷ்கா ஷர்மா, நட்புக்காக சல்மான் கான் என கடந்த 2018ம் ஆண்டு வெளியான ஜீரோ திரைப்படம் 200 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில், மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு புதிய படங்களில் கமிட் ஆகாமல், இதுவரை எந்தவொரு படத்தையும் ரிலீஸ் செய்யாமல் 4 ஆண்டுகளை ஓட்டி விட்டார் ஷாருக்கான்.

கதை தான் முக்கியம்

கதை தான் முக்கியம்

நல்ல கதை மற்றும் நேர்த்தியான திரைக்கதை தான் வெற்றிக்கு முக்கியம் என நினைத்த ஷாருக்கான் இயக்குநர் அட்லியிடம் கதை கேட்டார். அட்லி படத்தை ஆரம்பித்த நிலையில், அதற்கு முன்னதாக பாலிவுட்டில் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த ‘வார்' படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படத்தில் நடிக்க சென்று விட்டார். ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகி உள்ள அந்த படம் அடுத்த ஆண்டு குடியரசு தினத்துக்கு வெளியாகிறது.

3 இடியட்ஸ் இயக்குநர்

3 இடியட்ஸ் இயக்குநர்

முன்னா பாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே, சஞ்சு உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநர் இயக்கத்தில் டன்கி எனும் படத்தில் நடிக்கப் போகும் அறிவிப்பையும் ஷாருக்கான் வெளியிட்டார். ஆனால், அட்லி படம் பற்றி வாயே திறக்கவில்லையே ஏன் என்கிற கேள்விகள் எழுந்த நிலையில், சமீபத்தில் அந்த படத்தின் டைட்டிலை ஒரு அட்டகாசமான டீசர் உடன் வெளியிட்டு இருந்தார் ஷாருக்கான்.

அட்லி இயக்கத்தில்

அட்லி இயக்கத்தில்

பிகில் படத்தை முடித்து விட்டு ஷாருக்கான் படத்தை முடித்து விட்டுத் தான் கோலிவுட்டில் கால் வைப்பேன் என கிளம்பிப் போன அட்லி ஜவான் படத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யப் போகிறார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அவர் முதன்முறையாக பாலிவுட்டில் ஜவான் படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.

நெட்பிளிக்ஸில் ஜவான்

நெட்பிளிக்ஸில் ஜவான்

ஜவான் படத்தின் போஸ்ட் தியேட்டரிக்கல் டிஜிட்டல் உரிமத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் இதுவரை எந்த படத்துக்கும் கொடுக்காத அளவுக்கு பெரிய தொகை கொடுத்து வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 100 முதல் 120 கோடி வரை அதன் டிஜிட்டல் உரிமம் விற்பனை ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஆண்டு ஷாருக்கானின் பதான், ஜவான் உள்ளிட்ட படங்கள் பான் இந்திய படமாக வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மீண்டும் பாலிவுட்டை தலை நிமிரச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X