Lubber Pandhu OTT: அன்புதான் கெத்துனு சொன்ன லப்பர் பந்து.. ஓடிடியில் ரிலீஸ் - முழு விபரம் இதோ!

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் கதாநாயகர்களாக நடித்து வெளியான படம் லப்பர் பந்து. இந்தப் படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் பார்த்த பலர் படம் குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். பெரும்பாலும் அனைவரும் படத்தை பாராட்டினர். குறிப்பாக படம் குடும்ப ரசிகர்கள் தொடங்கி இளைஞர்கள வரையிலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படம் எப்போது ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என கேட்டுக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், படம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதை. குறிப்பாக கிராமங்களில் விளையாடப்படும் லப்பர் பந்து கிரிக்கெட்டினை மைய்யமாகக் கொண்ட கதை. இப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழரசன் பச்சமுத்து அறிமுகமாகின்றார். லப்பர் பந்து திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். சான் ரோல்டன் அட்டகாசமாக இசை அமைத்துள்ளார்.

attakaththi dinesh harish kalyan lubber pandhu disney plus hotstar ott

படம் விமர்சன ரீதியாக வெற்றியை எட்டியது மட்டும் இல்லாமல், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிப்படமாக மாறியது. ஹரீஸ் கல்யாண் அன்பு கதாபாத்திரத்திலும், அட்டக்கத்தி தினேஷ் கெத்து கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு இந்தக் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்திப் போனார்கள். மேலும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது மட்டுமே கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வருகின்றன.

ஈகோ: அந்தவகையில் லப்பர் பந்து படமும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக அமைந்தது. படம் முழுக்க தினேஷ் மற்றும் ஹரீஸ் கல்யாணுக்கு இடையிலான ஈகோ பிரச்னையை மட்டும் காட்டாமல், படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நல்ல அழுத்தம் திருத்தமான திரைக்கதை அமைத்து படம் பார்த்த அனைவருக்கும் திருப்திகரமான எண்ணத்தை உருவாக்கிவிட்டனர். இதுமட்டும் இல்லாமல், படத்தில் தினேஷ் கெத்து என அழைக்கப்படுகின்றார். அவர் கிரிக்கெட் விளையாட களத்திற்கு வரும்போது எல்லாம், விஜயகாந்த்தின் பொட்டு வெச்ச தங்கக் குடம் பாடல் ஒலிக்கப்படுகின்றது. அதேபோல், ஹரீஸ் கல்யாண் களமிறங்கும்போது, விஜய்யின் போக்கிரி பொங்கல் பாடல் ஒலிக்கப்படுகின்றது.

கேப்டன்: விஜயகாந்தின் பொட்டு வெச்ச தங்கக் குடம் பாடலுக்கு திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுமட்டும் இல்லாமல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது, களத்தில் தோனி இறங்கும்போது இந்தப் பாடலை ஒலிக்கச் செய்யவேண்டும் எனும் அளவிற்கு இணையத்தில் பேச்சு எழுந்தது.

ஓடிடி: இந்த அளவிற்கு படத்திற்கு வரவேற்பு கிடைத்ததால், படம் எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே படம் தீபாவளி தினத்தில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது என படக்குழு தெரிவித்தது. அதன் அடிப்படையில் படம் இன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X