அவதார் 2 ஓடிடி ரிலீஸ்.. அறிவிக்கப்பட்டது தேதி.. இனி கொண்டாட்டம்தான்
சென்னை: அவதார் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்தப் படம் அமேசான் ப்ரைமில் ஸ்ட்ரீமிங் ஆக இருக்கிறது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளிவந்து உலக அளவில் சினிமா ரசிகர்களை வியக்க வைத்த படம் 'அவதார்'. இப்படி ஒரு சயின்ஸ் - பிக்ஷன் படமா என படத்தைப் பார்த்து அப்போது வியக்காதவர்களே இல்லை. அந்த அளவுக்கு அவதார் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் அமைந்திருந்தன.

ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2
அவதார் படத்தின் இரண்டாம் பாகமான 'அவதார் - தி வே ஆப் வாட்டர்' படம் உலக அளவில் கடந்த வருடம் 16ஆம் தேதி வெளியானது. தமிழ் உள்ளிட்ட 160 மொழிகளில் படம் வெளியானது. முதல் பாகம் அனைவரிடமும் வரவேற்பைப் பெற்றிருந்த சூழலில் அவதார் 2 கலவையான விமர்சனங்களை பெற்றது.. மேலும் அவதார் 1 வேறு உலகத்தில் இருந்ததுபோன்று இருந்தது. ஆனால் அவதார் 2 சராசரி சினிமா என்ற வட்டத்திற்குள் வந்துவிட்டதாக பலரும் கூறினர்.

அவதார் 2 திரைப்படத்தின் கதைக்களம்
முதல் பாகமான "அவதார்" படத்தின் சம்பவங்களுக்கு பிறகு, ஒரு தசாப்த காலக்கட்டத்தை கடந்து , சல்லி குடும்பம் (ஜேக், நெய்திரி மற்றும் அவர்களது குழந்தைகள்), அவர்களைப் பின்தொடரும் பிரச்னைகள், பாதுகாப்புடன் இருப்பதற்கு அவர்கள் செல்லும் தூரம், அவர்கள் உயிருடன் இருக்க போரிடும் போர்கள் மற்றும் அவர்கள் அடையும் துயரங்கள் அவர்களின் வெற்றி என இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.

ஆஸ்கர் விருது வென்ற அவதார் 2
கடந்த 13ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் 95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் அவதார் 2 படத்துக்கு சிறந்த விஷுவல் எஃபெகட் பிரிவில் விருது வழங்கப்பட்டது. ஜோ லிட்டேரி, ரிச்சர்ட் பனேகம், எரிக் செயிண்டன், டேனியல் பேரட் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர்.

ஓடிடி ரிலீஸ் எப்போது?
திரையரங்குகளில் வெளியான அவதார் 2 படம் எப்போது ஓடிடியில் ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இந்நிலையில் அவதார் - தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் நாளை (மார்ச் 28) அமேசான் ப்ரைம் மற்றும் ஆப்பிள் டிவி ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி 4 மாதங்களுக்கு பிறகு ஓடிடியில் இந்தப் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் வசூலில் ஏமாற்றிய அவதார் 2
முன்னதாக, அவதார் படத்தின் முதல் பாகம் உலக அளவில் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து பிரமிக்க வைத்தது. இதனால் அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட அதிக அளவு வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் பாகத்தைவிட அவதார் தி வே ஆஃப் வாட்ட ர் படம் குறைந்த அளவே வசூல் செய்தது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











