இருட்டில் தெரிந்த நிழல்.. ஜாக்கெட் அளவால் சிக்கிய கள்ளக்காதல் ஜோடி.. விவகாரமான மலையாள பட விமர்சனம்!

சென்னை: இயக்குநர் சென்னா ஹெக்டே இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் தியேட்டரில் வெளியான திரைப்படம் தான் 'அவிஹிதம்'. இந்த படத்தில் உன்னி ராஜா, ரெஞ்சி கங்கோல், பிருந்தா மேனன், வினீத் சக்யார், ராகேஷ் உஷார், தனேஷ் கோலியாட் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். 'ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி விடுவார்கள்' என ஒரு பழமொழியை நாம் கேள்வி பட்டு இருக்கிறோம். அப்படி ஈரை போனாக்கிய கதை தான் இந்த படத்தின் கதை. யாரோ ஒருவன் சொன்ன கதையை நம்பி ஒட்டுமொத்த ஊரும் என்னென்ன கோக்குமாக்கு வேலைகளை செய்கிறார்கள் என்பதை இந்த படத்தின் இயக்குநர் அழகாக கொண்டு சென்றுள்ளார்.

'அவிஹிதம்' படத்தோட கதை ஆரம்பிக்கும் போது டெயிலர் வேணு மற்றும் பிரகாஷ் இருவரும்
நைட்ஷோ படம் பார்த்து விட்டு, வயல் வெளியில் மது அருந்திவிட்டு போதையில் இருக்கின்றனர். அப்போது தூரத்தில் ஆண், பெண் இருவரின் நிழல் தெரிகிறது. அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து காதல் சேட்டைகளில் ஈடுபடுகின்றனர். இதைப்பார்த்த வேணு மற்றும் பிரகாஷ் அது யார் என்பதை பார்ப்பதற்காக அருகில் செல்கின்றனர். அதில், ஆண் மாவு மில் வைத்து இருக்கும் வினோத் என்பது தெரிந்துவிடுகிறது. ஆனால், அந்த பெண் யார் என்பது தெரியாததால், டெயிலர் வேணு மற்றும் பிரகாஷ் இருவரும் குழப்பம் அடைகின்றனர்.

Malayalam movie review OTT
Photo Credit:

படத்தின் கதை: மறுநாள் காலை டெயிலர் வேணு மற்றும் பிரகாஷ் இருவரும் அந்த பெண் யார் என்பதை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்பதற்கான மீண்டும், அதே நேரம் அந்த இடத்திற்கு செல்கின்றனர். இவர்கள் நினைத்தபடி, டிவியில் பிரபலமான சீரியல் முடிந்த பிறகு, தச்சு வேலை செய்யும் முகுந்தனின் வீட்டில் லைட் அணைக்கப்படுகிறது. உடனே ஒரு பெண் வருகிறாள், அவள் வந்த கொஞ்ச நேரத்தில் வினோத் வருகிறான். சிறிது நேரத்தில் இருவரும் முகுந்தன் வீட்டு தோட்டத்தில் இருக்கும் பாத்ரூமுக்குள் சென்றுவிடுகின்றனர். பின் அரைமணி நேரம் கழித்து இருவரும் வெளியே வருகின்றனர். இதை தூரத்தில் இருந்து பார்த்த டெயிலர் வேணு மற்றும் பிரகாஷ், அந்த பெணிண் முகத்த்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என முயற்சி செய்ய, ஆனால், இந்த முறையும் அந்த பெண் யார் என்பதை பார்க்க முடியவில்லை.

யார் அந்த பெண்: இதனால் இருவரும் அந்த மர்மப் பெண் யார்? என மண்டையை உடைத்துக்கொண்டு இருக்க, அப்போது, டெயிலருக்கு ஒரு ஐடியா வருகிறது. ஒரு பெண்ணோட நிழாலை வைத்தே நான் அளவை சொல்லிவிடுவேன், இந்த ஊரில் இருக்கும் எல்லா பெண்களுக்கும் நான் தான் ஜாக்கெட் தைத்துக்கொடுகிறேன். நடு ராத்திரியில் வினோத்திட இருந்த பெண்ணின் அளவு, 34, 30, 34 இந்த அளவு ஜாக்கெட் யாருடையதோ அவர் தான் வினோத்தின் காதலி என முடிவு செய்து, இருவரும் நடுராத்திரியில் டெயிலர் கடையை திறந்து, கடையின் மெஷர்மெண்ட் புத்தகத்தை எடுத்து பார்க்கின்றனர். கடைசியில் அது, தச்சு வேலை செய்யும் முகுந்தனின் மனைவி நிர்மலா என்பது தெரியவருகிறது.

Malayalam movie review OTT
Photo Credit:

ஜாக்கெட் அளவு: இதனால் அதிர்ச்சி அடையும் டெயிலர் வேணு, இது நல்ல காதல் இல்லடா, கள்ள காதல், நிர்மலா நல்ல பெண்ணு நினைச்சேன், முகுந்தன் குடும்பத்திற்காக சம்பாதிப்பதற்காக வெளியூர்ல கஷ்டப்படுறான். ஆனால், நிர்மலா, வினோத்தோட கள்ளக்காதல் செய்கிறாள். இந்த விஷயத்தை இப்படியே விட்டா, இந்த ஊரோட மானமே போய்விடும் இந்த விஷயத்தை முகுந்தனிடம் சொல்லியே ஆகவேண்டும் என இருவரும் முடிவு செய்கின்றனர். ஆனால், டெயிலர் வேணு, இந்த விஷயத்தை முகுந்தனிடம் சொல்லாமல், அவன் தம்பி முரளியிடம் சொல்லி இருவரையும் கையும் களவுமாக பிடித்து முகுந்தனிடம் நிறுத்தலாம் என பிளான் போட்டு முரளியை வர சொல்கிறான்.

டெய்லரின் மட்டமான ஐடியா: டெயில் சொன்ன விஷயத்தை கேட்ட முரளி, அண்ணியா இப்படி செய்கிறார்கள் என வருத்தப்படுகிறான். பின் இருவரையும் பிடிப்பதற்காக, அந்த வயல்வெளிக்கு செல்கின்றனர். அதே போல சீரியல் முடிந்து, முகுந்தனின் வீட்டில் லைட் அணைகிறது, தூரத்தில் ஒரு பெண் வந்து காத்து இருக்கிறாள். ஆனால், வினோத் வராததால், இவர்களின் பிளாக் சொதப்பி விடுகிறது. நாளைக்கு நைட் வினோத் நிச்சயம் வருவான், அவனை கொத்தாக தூக்க வேண்டும் என மீட்டிங் போட்டு திட்டம் போடுகின்றனர். அதற்குள், வினோத்தின் கள்ளக்காதலி நிர்மலா தான் என்ற செய்தி அந்த ஊர் முழுவதும் பரவி விடுகிறது. நிர்மலாவை கிராமத்து பெண்கள் ஒவ்வொருவரும் திட்டிதிட்டி வருகின்றனர். நிர்மலாவை கையும் களவுமாக பிடிக்க, ஒட்டுமொத்த ஊரும் அந்த வயல் வெளியில் மறைத்து இருந்து காத்து இருக்கின்றனர். கடைசியில் அந்த கள்ளக்காதல் ஜோடி சிக்கியதா? வினோத்தை காதலிப்பது நிர்மலா தானா? டெய்லரின் ஜாக்கெட் ஐடியா வேலைக்கு ஆனதா என்பது தான் 'அவிஹிதம்' படத்தோட கதை. சோனிலிவ் ஓடிடி தளத்தில் அனைத்து மொழிகளிலும் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X