OTT vs தியேட்டர்.. வேறலெவல் போட்டியா இருக்கே இன்னைக்கு.. ஓடிடியில் வெளியான 3 தரமான படங்கள்!
சென்னை: ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம், மணிகண்டன் நடிப்பில் வெளியாகி உள்ள லவ்வர் என 2 படங்கள் தியேட்டர்களில் இன்று வெளியாகின்றன. ஆனால், அதே சமயம் தியேட்டர் பக்கமே போகாதீங்க உட்கார்ந்து குடும்பத்துடன் வீட்டிலேயே பொங்கலுக்கு வெளியான புதிய படங்களை பார்த்து கொண்டாடுங்க என அதிரடியாக 3 பெரிய படங்கள் இன்று ஓடிடியிலும் வெளியாகி உள்ளன.
இந்த ஆண்டு பொங்கலுக்கு பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படங்கள் தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஓடிடியிலும் இன்று முதல் பெரிய சம்பவத்தை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தியேட்டரிலேயே தமிழில் வெளியாகாத குண்டூர் காரம் திரைப்படம் ஓடிடியில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது.

டிரெண்டிங்கில் குண்டூர் காரம்: திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு, ஸ்ரீலீலா, மீனாட்சி சௌத்ரி, ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் மகர சங்கராந்திக்கு வெளியான குண்டூர் காரம் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. நேற்று முதலில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் #GunturKaaramOnNetflix ஹாஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. மகேஷ்பாபுவின் மாஸான நடிப்பையும் ஸ்ரீலீலாவின் அட்டகாசமான நடனத்தையும் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் நெட்பிளிக்ஸ் பக்கம் ஒதுங்கி உள்ளனர்.

கேப்டன் மில்லர் எந்த ஓடிடி தளத்தில் ரிலீஸ்?: இந்தாண்டு பொங்கலுக்கு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், அதிதி பாலன், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அதிரடியான போர் திரைப்படம் கேப்டன் மில்லர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீம் ஆகிறது. பொங்கலுக்கு வெளியான இந்த படம் 90 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குழந்தைங்க இனி ரிமோட் கொடுக்க மாட்டாங்க: அப்படியே சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான அயலான் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. டாட்டூ ஏலியனை பார்த்துவிட்டால் குழந்தைங்க இனிமேல் மற்ற ஓடிடி பக்கம் போகவோ வேறு எதையும் பார்க்க விட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தியேட்டர் ரிலீஸ்: ஓடிடியில் இப்படி அதிரடியாக மூன்று படங்கள் படையெடுத்துள்ள நிலையில், மக்கள் கூட்டம் இதைத்தாண்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் மற்றும் மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் உள்ளிட்ட படங்களை தியேட்டருக்கு சென்று இன்று பார்ப்பார்களா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அதையும் தாண்டி அந்த படங்கள் வெற்றி பெற்றால் அது தரமான சம்பவம்தான்.


Click it and Unblock the Notifications











