Ayalaan OTT Release: ஓடிடி ரிலீஸுக்கு ரெடியான அயலான்... எப்போ எதுல வெளியாகுதுன்னு தெரியுமா..?

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் சயின்ஸ் பிக்‌ஷன் படமாக உருவான அயலான், பொங்கலை முன்னிட்டு கடந்த 12ம் தேதி வெளியானது. இந்தப் படம் தற்போது தெலுங்கிலும் நேரடியாக ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் திரையரங்குகளில் அடுத்தடுத்து புதிய படங்கள் வெளியாகி வருவதால், அயலான் ஓடிடியில் ரிலீஸாக ரெடியாகிவிட்டது.

ஓடிடியில் வெளியாகும் அயலான்
இந்த பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர் படங்கள் நேருக்கு நேர் மோதின. நண்பர்களாக இருந்த தனுஷும் சிவாவும் இப்போது பேசிக்கொள்வதே கிடையாது. இதனால் அயலான் - கேப்டன் மில்லர் படங்கள் ஒரே தேதியில் ரிலீஸானது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கடந்த 12ம் தேதி வெளியான அயலான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 Ayalaan OTT Release: Sivakarthikeyans Ayalaan will be streamed Sun Next OTT on Feb 9th

ரவிக்குமார் இயக்கிய அயலான் ஏலியன்ஸை பின்னணியாக வைத்து சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகியிருந்தது. சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். தனுஷின் கேப்டன் மில்லருடன் போட்டிப் போட்ட அயலான், பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 75 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இந்தப் படத்தின் கிராபிக்ஸ், மேக்கிங் போன்றவை ரசிகர்களுக்கு புது அனுபவமாக அமைந்துள்ளது. இதுவரை ஹாலிவுட்டில் மட்டுமே இப்படியான படங்களை பார்க்க முடியும் என்ற நிலையை அயலான் மாற்றியுள்ளது. அதன் காரணமாக அயலான் படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ரசித்தனர். பொங்கல் விடுமுறை முடிந்ததும் கேப்டன் மில்லரை விட அயலானுக்கு ஸ்க்ரீன்ஸ்கள் அதிகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அயலான் படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தர். அதேபோல், அயலான் தற்போது நேரடியாக தெலுங்கில் வெளியாகி அங்கேயும் செம்ம சக்சஸ் கொடுத்துள்ளது. இதனையடுத்து அயலான் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாம். பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் புதிய படங்கள் ரிலீஸாகி வருகின்ற்ன. அதன்படி தற்போது ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன் படங்கள் வெளியாகின.

அடுத்த மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் லால் சலாம் படமும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் இதற்கு மேல் திரையரங்குகளில் தாக்குப் பிடிக்காது என தெரிந்துகொண்ட படக்குழு, அயலான் ஓடிடி ரிலீஸுக்கு தேதி முடிவு செய்துவிட்டனர். அதன்படி அயலான் திரைப்படம் பிப்ரவரி 9ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஓடிடி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X