அஜித்தின் வலிமை ஓடிடி ரெக்கார்டை பின்னுக்குத் தள்ளிய அயலி, விலங்கு.. 100 மில்லியன் ஸ்ட்ரீமிங்காம்!
சென்னை: நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் எனும் சர்வதேச ஓடிடி நிறுவனங்களுக்கு போட்டியாக இந்திய நிறுவனமான ஜீ5 ஓடிடி செம டஃப் கொடுத்து வருகிறது.
தமிழ் உள்ளிட்ட பிராந்திய ரசிகர்கள் விரும்பும் வகையில் புதிய புதிய படைப்புகளை வெளியிட்டு பலரையும் ஓடிடி உலகத்துக்குள் கவர்ந்து வருகிறது.
விமல் நடித்த விலங்கு வெப்சீரிஸ் மற்றும் இந்த ஆண்டு வெளியான அயலி வெப்சீரிஸ் இரண்டுமே 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் கிளப்பில் இணைந்துள்ளதாக ஜீ5 நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஓடிடியில் ரசிகர்களை கவரும் ஜீ5
சிறந்த படைப்புகளை கொடுத்து ஓடிடியில் இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது ஜீ5. பெரிய நடிகர்களின் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் எல்லாம் முதன்மையாக கருதாமல் கன்டென்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படைப்புகளை அதிகளவில் கொடுத்து நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பிரபல ஓடிடி நிறுவனங்களுக்கு செம டஃப் போட்டி கொடுத்து வருகிறது. கடந்த இரு ஆண்டுகளில் அதிக படைப்புகள் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகி உள்ளது என அறிவித்துள்ளனர்.

விலங்கு 100 மில்லியன் கிளப்
விமல் நடிப்பில் கடந்த ஆண்டு ஜீ5 ஓடிடியில் வெளியான விலங்கு வெப்சீரிஸ் தமிழ் ரசிகர்களை ஓடிடி பக்கம் அதிகமாக ஈர்த்தது என்றே சொல்லலாம். இந்நிலையில், 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் கிளப்பில் விலங்கு வெப்சீரிஸ் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜீ5 நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வெப்சீரிஸில் இடம்பெற்ற வில்லன் கதாபாத்திரமான கிச்சா ரோல் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமின்றி மீம்களாகவும் டிரெண்டாகின.

100 மில்லியன் கிளப்பில் அயலி
கடந்த ஆண்டு வெளியான விமலின் விலங்கு வெப்சீரிஸ் 100 மில்லியன் கிளப்பில் இணைந்த நிலையில், இந்த ஆண்டு இயக்குநர் முத்துகுமார் இயக்கத்தில் வெளியான அயலி வெப்சீரிஸ் பெண்கள் மீது சுமத்தப்படும் ஆணாதிக்க சதிகளுக்கு எதிரான படமாக புரட்சி கருத்துக்களை சாட்டையடியாக கான்பித்த நிலையில், அதிரடியாக 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் கிளப்பில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாஸ் காட்டிய வலிமை
வலிமை, பேப்பர் ராக்கெட் உள்ளிட்ட படைப்புகளும் ஜீ5 ஓடிடிக்கு மிகப்பெரிய அளவில் வாடிக்கையாளர்களை ஈட்டித் தந்ததாகவும் ஜீ என்டர்டெயின்மென்ட் தெற்கு தலைமை அதிகாரி சிஜு பிரபாகரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தொடர்ந்து ரசிகர்களுக்கு பிடித்த படைப்புகளையே கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











