ஓடிடியில் வெளியாகிறது அயோத்தி

இயக்குநர் R. மந்திர மூர்த்தி இயக்கத்தில், பாராட்டுக்கள் பெற்ற உணர்ச்சிகரமான டிராமா திரைப்படம் அயோத்தி ZEE5 இல் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது!

இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமான ZEE5 தனது அடுத்த தமிழ் வெளியீடாக, பரவலான பாராட்டுக்கள் பெற்ற 'அயோத்தி' படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது. Trident Arts தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R. மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ,நடிகர் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா மற்றும் புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உலக திரைப்பட தகவல் தளமான ஐஎம்டிபி இணையதளத்தில் 8.5 மதிப்பீட்டினை, பெற்றுள்ள அயோத்தி திரைப்படம், திரையரங்குகளில் அமோகமான வரவேற்பைப் பெற்றது. தற்போது 7 ஏப்ரல் 2023 அன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ உலக டிஜிட்டல் பிரீமியரை ZEE5 அறிவித்துள்ளது.

அயோத்தியிலிருந்து ராமேஸ்வரத்திற்குச் சுற்றுலா செல்ல முடிவெடுக்கும் நான்கு பேர் கொண்ட குடும்பத்தைச் சுற்றி இப்படத்தின் கதை சுழல்கிறது. மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் கார் பயணத்தின்போது, ​​தேசபக்தர் பல்ராம் (யஷ்பால்) ஓட்டுநரிடம் தவறாக நடந்து கொள்கிறார், இருவருக்குமான வாக்குவாதத்தால் ஏற்படும் விபத்து, பல்ராமின் மனைவியின் மரணத்திற்கு வழிவகுத்து விடுகிறது. மீதிக் கதையானது, இரண்டு குழந்தைகள் தங்கள் அதீத மதவெறி பிடித்த தந்தையின் கைகளில் படும் துன்பங்களையும், டிரைவரின் நண்பர்களான இருவர் (சசிகுமார் மற்றும் புகழின் கதாபாத்திரங்கள்) தங்கள் தாயின் சடலத்தை எடுத்துச் செல்ல குழந்தைகளுக்கு உதவுவதையும் சித்தரிக்கிறது. எல்லா முரண்பாடுகளையும் மீறி அவர்களின் சொந்த ஊருக்கு எப்படிச் செல்கிறார்கள் என்பதே படம். மதங்களைத் தாண்டிய மனிதநேயம் போற்றும் காவியமாக இப்படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டுக்களைக் குவித்தது.

Ayothi OTT Release date Announced

மதம், மூடநம்பிக்கைகள், ஆண்களின் பேரினவாத மனப்பான்மை மற்றும் பல சமூக பிரச்சினைகளை இந்தக்கதை வழியே அழுத்தமாக பேசுகிறது அயோத்தி திரைப்படம். மேலும், மொழி, புவியியல் மற்றும் மத அரசியல் ஆகியவை படத்தின் கதையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இசையமைப்பாளர் NT ரகுநந்தனின் பின்னணி இசை உணர்ச்சியமான காட்சிகளை வேறொரு நிலைக்கு உயர்த்துகிறது, மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு அயோத்தி மற்றும் ராமேஸ்வரத்தின் தோற்றத்தையும் உணர்வையும் மிக அழகாகப் படம்பிடித்துள்ளது.

நடிகர் எம்.சசிகுமார் கூறுகையில்,
"மனித நேயம் பேசும் ஒரு அழகான காவியமான "அயோத்தி" படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை அடைகிறேன். இப்படம் மனித உணர்வுகளின் சரியான கலவையைக் கொண்டுள்ளதோடு 'வாழ்க்கை' என்ற இந்தப் பயணத்தில் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். திரையரங்கில் பாராட்டுக்களைப் பெற்ற இப்படம், இன்னும் பெரிய அளவிலான பார்வையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 190+ நாடுகளில் பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் ZEE5 தளத்தில் இப்படம் வெளியிடப்படுவது மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. அயோத்தி படம் மூலம் ரசிகர்கள் ஒரு அழகான அனுபவத்தைப் பெறுவார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X