சிறையில் இருக்கும் கர்ப்பிணி.. காப்பாற்ற துடிக்கும் கணவன்.. இப்படி ஒரு படத்தை பாத்திருக்க மாட்டீங்க

சென்னை: பலவிதமான திருப்பங்கள் நிறைந்த ஆசாதி திரைப்படம் கடந்த ஆண்டு தியேட்டரில் வெளியாகி மக்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றது. ஜோ ஜார்ஜ் இயக்கத்தில், ஸ்ரீநாத் பாசி, வாணி விஸ்வநாத் லால், சாய்ஜு குருப், மாமன்னன் படப்புகழ் ரவீனா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பல விதமான திருப்பங்கள் கொண்ட இந்த படத்தின் விமர்சனத்தை இப்போது பார்த்தோம்.

ரவீனா கர்ப்பிணிப் பெண்ணான கங்கா கதாபாத்திரத்திலும், ஸ்ரீநாத் பாசி ரகு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். லால் கங்காவின் தந்தையாக நடித்துள்ளார். வாணி விஸ்வநாத் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த படத்தின் கதை என்ன வென்றால், அம்மா இல்லாத தனது இரண்டு மகள்களை லால் மிகவும் கஷ்டப்பட்டு வளர்கிறார். இதில், கங்காவிற்கு பிறவிலேயே வாய் பேச முடியாது. இப்படி இருக்கும் நேரத்தில் கங்காவின் தங்கையை அரசியல்வாதியின் மகன் கர்ப்பமாகி ஏமாற்றி விடுகிறான். ஏமாற்றம் தாங்க முடியாத கங்காவின் தங்கை தற்கொலை செய்து கொள்கிறாள். இந்த விஷயம் தெரிந்த கங்கா, அரசியல் வாதியின் மகனை வெட்டி கொலை செய்து விடுகிறாள்.

Malayalam movie review OTT
Photo Credit:

படத்தின் கதை: இதையடுத்து, நீதிமன்றம் கங்காவிற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கிறது. கங்கா சிறைக்கு செல்லும் போது கர்ப்பமாக இருக்கிறாள். அடுத்த ஆறு மாதத்தில் கங்கா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள். அவள் மிகவும் பலவீனமாக இருப்பதால், சிறையில் பிரசவம் பார்ப்பது கஷ்டம், மருத்துவமனையில் அவளை அனுமதிக்கும் படி சொல்ல, போலீசார் பரோலில் எடுத்து கங்காவை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். மேலும், கங்காவிற்கு துணையாக, பண மோசடி வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் பெண் ஒருவரையும் சிறை அதிகாரி உடன் அனுப்பி வைக்கிறார்.

கர்ப்பிணி பெண்: அப்போது, கங்காவின் அப்பா லால், தனது மகளுக்கு பழம் மற்றும் சில திண்பண்டங்களை வாங்கி கொடுக்கிறார். அதில், நீ கவலைப்படாதே சீக்கிரமாக உன்னை வெளியில் கொண்டு வந்துவிடுவேன் என்ற கடிதத்தை அனுப்பி இருக்கிறார். தன் மகளை பத்திரமாக வெளியில் கொண்டு வருவதற்காக, அந்த மருத்துவமனையில் இருக்கும் ஆம்புலன் டிரைவர், நர்ஸ், சில நோயாளிகளின் உறவினர்களிடம் தனக்கு உதவி செய்யும் படியும், அதற்கு பணம் தருவதாக லால் மற்றும் அவரது கணவர் ஸ்ரீநாத் பாசி இருவரும் பேசுகின்றனர். அனைவருக்கும் பணத்தேவை இருப்பதால், அனைவரும் இதற்கு ஒகே சொல்கின்றனர்.

Malayalam movie review OTT
Photo Credit:

கடத்தல் திட்டம்: இதையடுத்து, கர்ப்பிணியாக இருக்கும் கங்காவை எப்படி வெளியில் கொண்டு வருவது என அனைவரும் சேர்ந்து திட்டம் போடுகின்றனர். அப்போது, லால், கங்காவிற்கு குழந்தை பிறந்த சில மணிநேரத்தில் அவரை கடத்த வேண்டும் என்று சொல்கிறார். அப்போது ஒருவர், குழந்தை நார்மளாக பிறந்தாலே நடப்பதற்கு இரண்டு நாள் ஆகும். சர்ஜரி என்றால் நடப்பதற்கு இரண்டு வாரம் கூட ஆகும். அப்படி இருக்கும் போது எப்படி குழந்தையையும், கங்காவையும் கடத்த முடியும் என்று கேட்கிறார். ஆனால், லால் எல்லாத்திற்கும் என்னிடம் ஐடியா இருக்கு, முதலில் இந்த விஷயத்தை கங்காவிடம் சொல்லவேண்டும். கங்காவை சுற்றி இப்போது போலீஸ் இருப்பதால், கங்காவிற்கு உதவி வந்த, அந்த பண மோசடி கைதியிடம் இந்த விஷயத்தை சொல்லி கங்காவிடம் சொல்ல சொல்லுங்க என சொல்கிறார்.

மாஸ்டர் பிளான்: இதையடுத்து, மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் டிரைவர், பண மோசடி வழக்கில் கைதாகி தற்போது, கங்காவிற்கு துணையாக வந்து இருக்கும் பெண்ணிடம், கங்காவிற்கு குழந்தை பிறந்தவுடன் கடத்தப் போகிறோம். இந்த விஷயத்தை அவரிடம் சொல்லிவிடுங்கள் என்று சொல்கிறார். இதை கேட்ட அந்த பெண், இந்த விஷயத்தை பாதுகாப்பில் இருந்த போலீசிடம் சொல்ல, போலீசார் இந்த விஷயத்தை உயர் அதிகாரியிடம் சொல்லிவிடுகிறார். இதனால், ஒட்டுமொத்த திட்டமும் போலீசுக்கு தெரிந்துவிடுகிறது.

போலீஸ் விசாரணை: கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணை எப்படி கடத்த முடியும், இது எல்லாம் வதந்தி என நினைக்கும் உயர் அதிகாரி. இந்த வழக்கை, மறைமுகமாக விசாரிக்க வாணி விஸ்வநாத் என்கிற ஐபிஎஸ் அதிகாரியை நியமிக்கிறார். அவர், லால், ஸ்ரீநாத் பாசியை பிடித்து விசாரிக்கிறார். விசாரணையில் ஸ்ரீநாத் பாசி, நிச்சயமாக நான் என் மனைவியை காப்பாற்றுவேன், உன்னால் முடிஞ்சா தடுத்துக்கோ என வாணி விஸ்வநாத்திற்கு சவால் விடுகிறான். இதையடுத்து, கங்காவிற்கு பிரசவ வலி வர, ஒட்டுமொத்த போலீஸ் கூட்டமும் மருத்துவமனையில் நிற்கிறது. பிரசவம் நல்லபடியாக முடிந்து குழந்தை பிறந்துவிட்டது. தாய், சேய் இரண்டு பேரும் நலம் என்ற செய்தியை கேட்ட ஐபிஎஸ் அதிகாரி, குழந்தை நல்லபடியாக பிறந்துவிட்டது. கங்காவை உடனடியாக சிறை மருத்துவமனைக்கு மாற்றுங்கள் என்று சொல்லிவிட்டு, உயர் அதிகாரிக்கு ஃபோன் செய்து, கங்கா பாதுகாப்பாக இருக்கிறார். இன்னும் ஒரு மணி நேரத்தில் அவரை சிறைக்கு அனுப்புகிறோம் என்று சொல்லிவிட்டு திரும்பும் போது, ஒரு போலீஸ் அதிகாரி பதற்றத்துடன் ஓடி வந்து கைதியை காணவில்லை என்றார்.

Malayalam movie review OTT
Photo Credit:

அதிரடியான திருப்பம்: அனைவரும் பதற்றத்தோடு, கங்கா இருக்கும் அறைக்கு சென்று பார்க்க, கங்கா, தனது குழந்தையுடன் இருக்கிறாள். அப்போ, காணாமல் போனது யார்? என்று அனைவரும் யோசித்த போது, கங்காவிற்கு உதவுவதற்காக சிறையில் அழைத்து வந்த பெண்ணை காணவில்லை என தெரிகிறது. அந்த பெண்ணை காப்பாற்றுவதற்கும் தான், இந்த ஒட்டுமொத்த திட்டமும் என தெரிந்து அதிகாரி அதிர்ச்சி அடைகிறார். அட்டகாசமான திருப்பங்களுடன் வெளியான இந்த மலையாளப் பட 'ஆசாதி' மனோரமா மேக்ஸ், அமேசான் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் தமிழில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X