For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ராஜமெளலியை தவிர பாகுபலியை இயக்க சரியான இயக்குநர் பிறக்கவில்லை போல.. கைவிடப்பட்ட பாகுபலி வெப்தொடர்?

  |

  சென்னை: நெட்பிளிக்ஸில் 200 கோடி ரூபாய் செலவில் பாகுபலி ப்ரீக்வல் வெப்சீரிஸாக எடுக்கப்படுவதாக அறிவித்து அதன் ஷூட்டிங் பணிகளும் ஆரம்பித்தன.

  ஆனால், நீங்க இதுவரை புடுங்கின ஆணிகளே போதும் இதற்கும் மேல் பல கோடிகளை வீணாக்க விரும்பவில்லை என நெட்பிளிக்ஸ் அந்த புராஜெக்ட்டையே அதிரடியாக நிறுத்தி விட்டதாக தற்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

  இந்த நெட்பிளிக்ஸில் ரூ. 10 கோடி சம்பளத்துடன் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

  கொரோனாவின் அடுத்த குறி டோலிவுட்டா...சிரஞ்ஜீவிக்கு கொரோனா பாசிடிவ் கொரோனாவின் அடுத்த குறி டோலிவுட்டா...சிரஞ்ஜீவிக்கு கொரோனா பாசிடிவ்

  1800 கோடி வசூல்

  1800 கோடி வசூல்

  பாலிவுட் நடிகர்களாலே சாதிக்க முடியாத 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூலை இயக்குநர் ராஜமெளலி பாகுபலி படங்கள் மூலம் சாதித்துக் காட்டி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். பாகுபலியின் இரண்டாம் பாகம் மட்டுமே 1800 கோடி ரூபாய் வசூலை கடந்து பெருவெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அமீர்கானின் தங்கல் படம் 2000 கோடி ரூபாய் வசூலை பெற உலகளவில் மார்க்கெட்டை ஓப்பன் பண்ணியதும் பாகுபலி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

  பாகுபலி வெப்சீரிஸ்

  பாகுபலி வெப்சீரிஸ்

  இத்தனை பெரிய வசூல் வாத்தை நெட்பிளிக்ஸ் சும்மா விடுமா? உடனடியாக வெப்சீரிஸ் தொடராக உருவாக்கலாம் என 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சிவகாமி தேவியின் இளம் வயது கதையை பாகுபலி பிஃபோர் தி பிகினிங் எனும் டைட்டிலில் எடுக்க முடிவு செய்தது. ஆனந்த் நீலகண்டன் என்பவர் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து இயக்குநர் தேவ கட்டா இந்த வெப் தொடரை உருவாக்கி வந்தார்.

  நடிகைகள் மாற்றம்

  நடிகைகள் மாற்றம்

  இந்தி மற்றும் மராத்தி படங்களில் நடித்து வரும் நடிகை மிருணாள் தாக்கூர் சிவகாமி தேவியின் யங் வெர்ஷனாக நடித்து வந்தார். ஆனால், திடீரென அவர் மாற்றப்பட்டு வாமிகா காபி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். சுமார் 6 மாதங்கள் செலவு செய்து எடுத்து வந்த அந்த வெப் தொடர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  நயன்தாராவும் இருப்பதாக

  நயன்தாராவும் இருப்பதாக

  மேலும், இந்த வெப் தொடருக்கு வலிமை சேர்க்கும் விதமாக நடிகை நயன்தாராவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கவும் படக்குழு முடிவு செய்திருந்தது. அதற்காக நடிகை நயன்தாராவுக்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்க முன் வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

  எடுத்தது எதுவும் பிடிக்கவில்லை

  எடுத்தது எதுவும் பிடிக்கவில்லை

  ஆனால், இயக்குநர் தேவ கட்டா இயக்கத்தில் உருவாகி வந்த இந்த வெப் தொடரின் ரஷ்களை பார்த்த நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு சுத்தமாக அவரது படைப்பு பிடிக்கவில்லையாம். அதன்காரணமாக இயக்குநரை மாற்றி விட்டு குணால் தேஷ்முக் மற்றும் ரிபு தாஸ் குப்தா என இரு இயக்குநர்களை வைத்து மீண்டும் புராஜெக்ட்டை ஆரம்பித்தனர். ஆனால், தற்போது அவர்களின் இயக்கமும் நெட்பிளிக்ஸுக்கு பிடிக்கவில்லை என ஒட்டுமொத்தமாக இந்த வெப்தொடரை இயக்கும் பணியையே நிறுத்தியுள்ளதாக தற்போது அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

  150 கோடி நஷ்டம்

  150 கோடி நஷ்டம்

  சுமார் 100 கோடிக்கு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு, 6 மாதங்கள் ஷூட்டிங் நடத்தியும் எதிர்பார்த்த அவுட் புட் கிடைக்காத விரக்தியில் மேலும், பல கோடிகளை இதில் முதலீடு செய்ய வேண்டாம் என நினைத்து நெட்பிளிக்ஸ் நிறுவனமே தற்காலிகமாக இந்த வெப் தொடரை உருவாக்கும் பணியை கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது. இயக்குநர் ராஜமெளலி கை வைத்தால் தான் பாகுபலி வெப்சீரிஸ் மீண்டும் உருவாகுமோ என்னவோ? மேலும், ரூ.150 கோடி செலவு செய்திருந்தால் நிச்சயம் கைவிட மாட்டார்கள் என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருப்போம்.

  English summary
  Netflix shelved the Baahubali: Before the beginning webseries after spending Rs 150 crore buzz circulates in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X
  Desktop Bottom Promotion