திரையில் அதிரடி காட்டிய செல்வராகவன்.. சர்ச்சையை கிளப்பிய பகாசூரன் ஓடிடி ரிலீஸ்!
சென்னை : பல சர்ச்சைகளை கிளப்பிய பகாசூரன் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் பகாசூரன் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை தாரக்ஷியும் இவர்களுடன் நட்டி என்கிற நட்ராஜ், ராதாரவி, கே. ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பாரூக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி. எஸ் இசையமைத்திருக்கிறார்.

செல்வராகவன்
காதல்கோட்டை,7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குநர் செல்வராகவன் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து, அருண் மாதேஸ்வரன் இயக்கிய சாணிக்காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷின் அண்ணனாக நடித்திருந்தார். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

அடுத்தடுத்த படங்களில்
சாணிக்காயிதம் திரைப்படத்திற்கு பின் செல்வராகவன் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி பகாசூரன் படத்தில் நடித்தார். மோகன் ஜி ஏற்கனவே திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய இரு படங்களை இயக்கி விமர்சனங்களில் சிக்கினார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வியாபார ரீதியாக இத்திரைப்படங்கள் வெற்றி பெற்றன.

வித்தியாசமான தலைப்பு
பகாசூரன் என வித்தியான தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில், பெண்களுக்கு எதிராக சமூதாயத்தில் நடக்கும் கொடுமை குறித்தும், பெண்கள் ஒரு போகப்பொருளாக பார்க்கும் இந்த சமூதாயத்தின் அழுக்கை அகற்ற பகாசூரனாக கத்தியோடு களமிறங்கி உள்ளார் செல்வராகன். பிப்ரவரி 17ந் தேதி திரையரங்கில் வெளியான இத்திரைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அமீர், மோகன் ஜி மோதல்
மோகன் ஜியின் படங்களை எச்.ராஜா, அண்ணாமலை உடனடியாக பார்த்து கருத்து சொல்கின்றனர். இவர்கள் ஏன் அசுரன்,மெட்ராஸ், காலா, கபாலி படங்களைப் பார்த்து கருத்து சொல்வதில்லை என்றும், வட நாட்டைப் போல ஆரோக்கியமற்ற சூழலை தமிழ்நாட்டில் உருவாக்க மோகன் ஜி நினைக்கிறார் என்றும் அமீர் பேசியிருந்தார். அமீரின் இந்த கருத்து தன்னை காயப்படுத்தி விட்டதாகவும் இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் மோகன் ஜி கூறியிருந்தார்.

ஓடிடியில்
பகாசூரன் திரைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பெரும் சர்ச்சைகளுக்கு இடையே கலவையான வரவேற்பை பெற்றது. ஆனால், பகாசூரன் படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனம் தான் பகாசுரன் படம் அனைவரின் கவனத்தை ஈர்க்க காரணமாக அமைந்தது. இந்நிலையில் இத்திரைப்படம் அமேசான் பிரைமில் மார்ச் 24ந் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











