பாலிவுட் டைரக்டர்களையே மிஞ்சிட்டாரே...பாலா...பாலா தான்ய்யா

சென்னை : பொதுவாக பாலிவுட் டைரக்டர்கள் தான் படத்தின் ஷுட்டிங்கை ஆரம்பிக்கும் முன்பே ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள். ஆனால் டைரக்டர் பாலா அவர்களையும் மிஞ்சி வேற லெவலில் பிளான் செய்து வருகிறார்.

கிட்டதட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு பாலா- சூர்யா கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. சூர்யா 41 என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் பற்றி பல தகவல்கள் கடந்த சில மாதங்களாகவே வெளியாகி வருகின்றன. ஆனால் இன்று தான் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பாலா-சூர்யா படம் ஆரம்பம்

பாலா-சூர்யா படம் ஆரம்பம்

பாலா -சூர்யா இணையும் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். படத்தின் ஷுட்டிங் இன்று கன்னியாக்குமரியில் துவங்குகிறது. இதற்காக பிரத்யேகமாக வீடு ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 45 நாட்களுக்கு இங்கு தான் ஷுட்டிங் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யாவின் ரோல் இதுவா

சூர்யாவின் ரோல் இதுவா

இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடவில்லை. இவரோடு ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், அதர்வா ஆகியோரும் முக்கிய ரோல்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சூர்யா காது கேட்காத, வாய் பேச முடியாத மீனவர் ரோலில் நடிக்கிறாராம்.

ஜுலையில் ஷுட்டிங் ஓவர்

ஜுலையில் ஷுட்டிங் ஓவர்

இன்று சோஷியல் மீடியா முழுவதும் சூர்யா-பாலா பட அறிவிப்பு பற்றி தான் பேச்சாக உள்ளது. இதில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், ஜுலை மாதத்திற்குள் இந்த படத்தின் ஷுட்டிங்கை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து சூர்யா-பாலா கூட்டணி அமைத்திருப்பதால் இது வேற லெவல் படமாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அட செம பிளானா இருக்கே

அட செம பிளானா இருக்கே

ஷுட்டிங் முடிப்பதை மட்டுமல்ல, ரிலீஸ் பற்றியும் இப்போதே பிளான் செய்து விட்டார்களாம். இந்த படம் தியேட்டரில் ரிலீசாகாதாம். அதற்கு பதிலாக நேரடியாக ஓடிடி.,யில் தான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய போகிறார்களாம். பாலா படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் வெற்றிமாறனின் வாடிவாசல், சிறுத்தை சிவா படங்கள் தான் தியேட்டரில் ரிலீசாக உள்ளதாம். பொதுவாக படத்தை முடித்து விட்டு தான் ரிலீஸ் பற்றி முடிவு செய்வார்கள். ஆனால் பாலா சற்று வித்தியாசமானவர் என்பதால் ஷுட்டிங்கை துவங்குவதற்கு முன்பே ரிலீசையும் பக்காவாக பிளான் செய்து விட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X