குமட்டும் ஆபாசம்.. சிறுமிகளை கூட விடல.. அந்த ஓடிடி நிறுவனத்தையே தடை பண்ணுங்க.. பொங்கும் ஃபேன்ஸ்!
மும்பை: ஆல்ட் பாலாஜி (Alt Balaji) எனும் ஓடிடி தளத்தை நடத்தி வரும் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மற்றும் அவரது அம்மா ஷோபா கபூர் இருவரும் சமீபத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் அளவுக்கு ஆல்ட் பாலாஜியில் இடம்பெற்ற பலான வெப்சீரிஸ் ஒன்று படுமோசமான வேலையை பார்த்துள்ளது.
உலகளவில் ஓடிடி நிறுவனங்களுக்கு எந்தவொரு தடையும் இல்லாத நிலையில், முழு நிர்வாணக் காட்சிகளையும், பாலுணர்வை தூண்டும் வன்புணர்வு காட்சிகள் மற்றும் உடலுறவு காட்சிகள் என அனைத்தும் செல்போனில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் பார்க்க முடியும் அளவுக்கு டெக்னாலஜி மாற்றி விட்டது.

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் என பெரிய ஓடிடி நிறுவனங்களில் இடம்பெறும் பல ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நியூடிட்டி என்கிற டேக் உடன் சர்வ சாதாரணமாக ஆபாச படங்கள் வெளியாகி வருகின்றன. அதற்கு ரசிகர்களும் அதிகம் என்பதால், இந்தியாவில் அந்த ஐடியாவை கையில் எடுத்து ஆல்ட் பாலாஜி எனும் ஓடிடி தளத்தை ஏக்தா கபூர் நடத்தி வெறும் பிட்டு படங்களை மட்டுமே தயாரித்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

சென்சார் இல்லை: மத்திய அரசு ஓடிடி தளங்களுக்கு தணிக்கை குழு அமைக்க முடியாமல் திணறி வருகிறது. ஓடிடி நிறுவனங்களே சர்ச்சைக்குரிய படங்கள் இல்லாமல் வெளியிட வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்தாலும் அது தண்டனைக்குரிய குற்றமாக இல்லாத நிலையில், தொடர்ந்து ஆபாச படங்களும், சாதி மற்றும் மத ரீதியான வன்முறையை தூண்டும் படங்களும், வெப்சீரிஸ்களும் வந்துக் கொண்டு தான் இருக்கின்றன. முன்பெல்லாம் ஹாலிவுட் படங்கள் சிடி வடிவில் வந்தால் கூட அதில் சென்சார் செய்யப்பட்டு இருக்கும். தியேட்டர்களில் வெளியாகும் படங்களுக்கும் சென்சார் உண்டு. ஆனால், ஓடிடியில் அது கொஞ்சம் கூட கிடையவே கிடையாது.
அதிகரிக்கும் பாலியல் தொல்லை: ஆணின் அனைத்து பாகங்களும், பெண்ணின் அனைத்து பாகங்களும் அப்படியே வெளிப்படையாக வெட்ட வெளிச்சமாக காட்டி வருவதால் இந்திய இளைஞர்கள் தவறான பாதைக்கு சிறு வயதிலேயே அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டுகளும் ஏகப்பட்ட பாலியல் தொல்லை புகார்களும் எழுந்த வண்ணமே உள்ளன.

போக்சோ வழக்கில் கைது: ஆல்ட் பாலாஜி ஓடிடி மூலமாக அடல்ட் கன்டென்ட்கள் என்கிற பெயரில் குமட்டும் ஆபாச வெப்சீரிஸ்களையும் ஷார்ட் ஃபிலிம்களையும் தயாரித்து வெளியிட்டு வந்த ஏக்தா கபூர் சமீபத்தில் வெளியான கண்டிபாத் வெப்சீரிஸின் 6வது சீசனில் சிறுமியை வைத்து ஆபாச காட்சி படமாக்கப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து எழுந்த புகாரில் தனது அம்மா ஷோபா கபூருடன் சிக்கியுள்ளார்.
கொதிக்கும் மக்கள்: ஆல்ட் பாலாஜி ஓடிடி தளத்தில் ராணுவ வீரர் இல்லாத நேரத்தில் அவருடைய உடையை எடுத்து மாட்டிக் கொண்டு மனைவி கள்ளக்காதலனுடன் செய்யும் காம லீலைகள் அடங்கிய வெப்சீரிஸ், இந்து மக்களுக்கு எதிரான விஷ விதைகளை விதைக்கும் வகையிலான சீரிஸ்கள், கள்ளத்தொடர்பு, வன்புணர்வு, சாதி மத வெறுப்பு உள்ளிட்டவை அடங்கிய மோசமான வெப்சீரிஸ்களை மட்டுமே ஏக்தா கபூர் உருவாக்கி இளைஞர்களை சீரழித்து வருவதாக கொந்தளித்துள்ள மக்கள் #Ban_AltBalaji ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். மத்திய அரசு விரைவில் இந்த ஓடிடி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











