Banshee Web Series Review: இது ஆக்‌ஷன் சீரிஸா? இல்லை?.. எல்லா நடிகைகளும் நிர்வாணமா நடிக்கிறாங்களே!

லாஸ் ஏஞ்சல்ஸ்: 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை எச்.பி.ஓவில் வெளியான தரமான அடல்ட் வெப்சீரிஸ் தான் இந்த பன்ஷீ (Banshee). அமேசான் பிரைமில் வெளியான பாய்ஸ் வெப்சீரிஸில் நடித்து பட்டையைக் கிளப்பிய ஆண்டனி ஸ்டார் தான் இந்த படத்தில் ஹூட் எனும் ஹீரோ ரோலில் நடித்துள்ளார். திருட்டுத் தொழில் செய்து வேலை பார்த்து வந்த ஹூட் ஒரு கட்டத்தில் தனது கூட்டாளி ரேபிட் என்பவரின் மகளுடன் சேர்ந்து ஒரு பெரிய பொருளை ஆட்டையைப் போட்டு விட்டு அந்த பெண்ணுடன் தப்பிச் செல்கிறார்.

தனது மகளையும் ஹூட்டையும் தேடிப் பிடித்துக் கொல்ல வேண்டும் என வில்லன் ரேபிட் அலைவதும், அவரது முடிவு எப்படி மாறுகிறது என்றும் ஒவ்வொரு சீசனுக்கும் புதிது புதிதாக வில்லன்களையும், நாயகனுக்கான காதலிகளையும் இந்த வெப்சீரிஸை உருவாக்கிய ஜானதன் ட்ராப்பர் மற்றும் டேவிட் சிக்லர் களமிறக்கி இளைஞர்களுக்கான விருந்தை தாராளமாக படைத்துள்ளனர்.

ott review

ஜியோ சினிமா ஓடிடியில் இந்த வெப்சீரிஸை இந்தியாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் அதன் அடல்ட் கன்டென்ட் காரணமாகவே பார்த்து வருகின்றனர். ஆக்‌ஷன் ப்ளாக் தெறிக்கும் கிரைம் த்ரில்லரான இந்த வெப்சீரிஸில் அதை விட ஒவ்வொரு எபிசோடிலும் கில்மா காட்சிகள் ஏகபோகமாக இருப்பது தான் இந்த வெப்சீரிஸ் உலகளவில் ஹிட் அடிக்க காரணமே என்கின்றனர்.

பன்ஷீ வெப்சீரிஸ் கதை: பன்ஷீ எனும் இடத்தை சேர்ந்த காவல் துறையில் ஷெரிஃப் ஆக வருகிறார் நாயகன் ஹூட் (ஆண்டனி ஸ்டார்). ரேபிட்டிடம் இருந்து அவரது மகளையும் பொருளையும் திருடிக் கொண்டு செல்லும் ஹுட் ஒரு கட்டத்தில் சிறைக்குச் செல்ல, நாயகி கேரி ஹோப்வெல் (இவானா மிலிசெவிக்) தனது வயிற்றில் வளரும் ஹீரோவின் கருவுக்கு பாதுகாப்புத் தேட இன்னொருவரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆகிவிடுகிறார். ஜெயிலில் இருந்து வெளியே வரும் நாயகன் ஷெரிஃப் ஆக மாறிவிட தனது முன்னாள் மனைவி மற்றும் அவரது மகள் மற்றும் மகனை நிழலாக இருந்து காப்பாற்ற முயற்சிக்கிறார். 15 ஆண்டுகளாக மகளை தேடும் ரேபிட் மகளை கொல்ல எடுக்கும் முயற்சிகளை ஹூட் முறியடிக்க ஒரு கட்டத்தில் ரேபிட்டே தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மரணிக்கிறார். அதன் பின்னரும் சில எதிரிகள் ஹூட் மற்றும் அவரது எக்ஸ் மனைவிக்குத் தொல்லை தர ஒவ்வொரு நபராக போட்டுத் தள்ளும் ஹூட் தனது முன்னாள் மனைவியுடன் இணைந்துக் கொண்டு திருட்டுத் தொழிலையும் ரகசியமாக செய்து வருகிறார். அதன் மூலம் சம்பாதிக்கும் எதிரிகளை அவர் என்ன செய்தார். இறுதியில் என்ன நடந்தது என பரபரப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சம் இல்லாமல் இந்த வெப்சீரிஸின் கதை நகர்கிறது.

ott review

ஏகப்பட்ட பெண்களுடன் உடலுறவு: 4 சீசன்களை கொண்ட இந்த கதையில் ஆரம்பத்தில் தனது மனைவி கேரி என்கிற அனாவுடன் முழு நிர்வாணமாக உடலுறவு கொள்ளும் ஹீரோ அடுத்ததாக பெண் போலீஸ் அதிகாரியாக வரும் ட்ரெஸ்டி கில்லி டன் என்பவருடன் உடலுறவு கொண்டு அவருடன் வாழ்க்கை நடத்தி வருகிறார். கை ப்ராக்டர் எனும் இன்னொரு வில்லனின் உறவுக்கார பெண்ணும் ஹீரோவுடன் சில நாட்கள் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்துவிட்டு அதன் பின்னர் வில்லன் மாமாவுடன் வாழ ஆரம்பித்து விடுகிறார். இன்னொரு சின்ன வில்லனின் தங்கை நோலாவுடன் மற்றும் வெப்சீரிஸில் வரும் அனைத்து நடிகைகளுடன் ஹீரோ உறவுக் கொள்ளும் காட்சிகளை அதீத ஆபாசத்துடன் இயக்கியுள்ளனர்.

பார்க்கலாமா? வேண்டாமா?: நிச்சயம் இது முழுக்க முழுக்க அடல்ட் ஒன்லி வெப்சீரிஸ் தான். ஏகப்பட்ட முழு நிர்வாணக் காட்சிகள் மற்றும் ரத்தம் தெறிக்க தெறிக்க நடக்கும் சண்டைக் காட்சிகள் அதிகம் உள்ளன. இளைஞர்களை அதிகளவில் டார்கெட் செய்து எடுக்கப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸை வயதுக்கு வந்தவர்கள் பார்க்கலாம். ஆபாசக் காட்சிகளை தாண்டி கதையாகவும் மேக்கிங்காகவும் ஒரு பக்காவான ஆக்‌ஷன் வெப்சீரிஸ் தான் இந்த பன்ஷீ. லீடு ரோலில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களின் நடிப்பும் அட்டகாசம்.

ott review

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X