Ponman OTT release: பசில் ஜோசப் ரசிகர்களே ஓடியாங்க.. ஓடிடியில் பொன்மான் படம் வந்துடுச்சு?

திருவனந்தபுரம்: குஞ்சிராமாயணம் படத்தின் மூலம் இயக்குநராக கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகமானவர்தான் மலையாள நடிகராக வலம் வரும் பசில் ஜோசப். 2017 ஆம் ஆண்டு கோதா படத்தை வெளியிட்ட போது கூட இவர் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் 2021 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான மின்னல் முரளி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் மலையாள திரை உலகின் முன்னணி இயக்குனராக மாறினார் பசில் ஜோசப்.

ஆனால் அந்த படத்திற்கு பிறகு அடுத்து இவர் எந்த படத்தை இயக்குவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, டிராகன் பிரதீப் ரங்கநாதன் போல ஹீரோவாக மாறி அடுத்தடுத்து படங்களை கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார்.

Basil Joseph Ponman movie out on OTT today

மலையாளத்தில் மினிமம் கியாரன்டி ஹீரோவாகவே மாறிவிட்டார் பசில் ஜோசப். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்மான் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில், மலையாள படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு சரியான விருந்து கிடைத்துள்ளது.

ஹீரோவாக மாறிய பசில் ஜோசப்: பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அதன் பின்னர் லவ் டுடே படத்தை தானே இயக்கி நடித்தார். டிராகன், எல்ஐகே என மற்ற இயக்குநர்கள் படங்களிலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஜெய ஜெய ஜெய ஹே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தொடர்ந்து இவருக்கு ஏகப்பட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

பசில் ஜோசப் நடித்த படங்கள்: உதவி இயக்குனராக இருக்கும்போதே 2013 ஆம் ஆண்டு வெளியான அப் அண்ட் டவுன் படத்தில் சிறுவேடத்தில் நடித்த பசில் ஜோசப் பல படங்களில் அட்மாஸ்பியர் ஆர்டிஸ்டாக நடித்து வந்தார். ஜெய ஜெய ஜெய ஹே படத்திற்கு பிறகு ஃபாலிமி, வருஷங்களுக்கு சேஷம், குருவாயூர் அம்பல நடையில், நுனக்குழி, சூக்‌ஷமதர்ஷினி, பொன்மான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக மரண மாஸ் மற்றும் யஷ் நடித்துவரும் டாக்ஸிக் படங்களிலும் நடித்து வருகிறார்.

ஓடிடியில் வெளியான பொன்மான்: ஜோதிஷ் சங்கர் இயக்கத்தில் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வெளியான பொன்மான் திரைப்படம் மார்ச் 14ஆம் தேதி ஆன இன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. மலையாள படங்களை பார்த்து ரசித்து வரும் தமிழ் சினிமா ரசிகர்களும் பசில் ஜோசப் படங்களை தொடர்ந்து ஓடிடியில் பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு பொன்மான் திரைப்படம் இந்த வாரம் மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தியேட்டரில் பெருசு, ஸ்வீட் ஹார்ட், டெக்ஸ்டர், வருணன், ராபர் உள்ளிட்ட படங்கள் இன்று வெளியாகி உள்ளன.

ரவி மோகன் நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படம் ரீ - ரிலீஸ் ஆகியுள்ளது. முன்னதாக இந்த வாரம் வெளியான ரேகா சித்திரம் திரைப்படத்தையும் ஓடிடியில் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். பசில் ஜோசப்புக்கு மலையாளத்தை போலவே தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X