அட செம...பீஸ்ட், கேஜிஎஃப் 2 ஓடிடியில் வருது...எப்போ தெரியுமா?
சென்னை : விஜய் நடித்த பீஸ்ட், யாஷ் நடித்த கேஜிஎஃப் 2 ஆகிய படங்களும் விரைவில் ஓடிடியில் திரையிடப்பட உள்ளன. எந்த ஓடிடி தளத்தில் எந்த தேதியில் வெளியிடப்பட உள்ளது என்ற விபரமும் வெளியாகி உள்ளது.
கொரோனா சமயத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் சில படங்கள் ஓடிடி.,யில் வெளியிட முன் வந்தன. ஆனால் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட உடன் ஓடிடி.,யில் திரையிடப்படும் படங்களை தியேட்டர்களில் வெளியிட எதிர்ப்புக்கள் எழுந்தது.

3 வாரங்களில் ஓடிடி ரிலீஸ்
தற்போது தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படும் படங்களை மூன்று வாரங்களில் ஓடிடியில் வெளியிடலாம் என பேசி முடிக்கப்பட்டுள்ளது. தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டு எவ்வளவு ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்தாலும், அந்த படத்தை மூன்று வாரங்கள் நிறைவடைந்ததும் ஓடிடி.,யில் வெளியிட்டு விடுகின்றன, படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பெற்ற நிறுவனங்கள்.

பீஸ்ட், கேஜிஎஃப் 2 வருது
அப்படி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட விஜய்யின் பீஸ்ட், யாஷின் கேஜிஎஃப் 2 போன்ற படங்கள் விரைவில் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளன. இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு, ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட இந்த படங்கள் தியேட்டரில் ரிலீசாகி ஒரு வாரம் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இதனால் இன்னும் 2 வாரங்களில் இவற்றை ஓடிடியில் ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. எந்த படம் எந்த தேதியில், எந்த தளத்தில் ரிலீசாக உள்ளது என்ற விபரத்தை இங்கு பார்க்கலாம்.

ஓடிடியில் வரவிருக்கும் படங்கள்
ஏப்ரல் 26
புக் மை ஷோ - Uncharted
நெட்ஃபிளிக்ஸ் / சன் நெக்ஸ்ட் - பீஸ்ட்
சோனி லைவ் - புழு
ஜீ 5 - கள்ளன், ஆர்ஆர்ஆர், தி காஷ்மீர் ஃபைல்ஸ்
மே 6
அமேசான் - சாணி காயிதம், கேஜிஎஃப் 2
ஹாட் ஸ்டார் - 12th Man

எந்த படம் எத்தனை கோடி வசூல்
இவற்றில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 25 ம் தேதி ரிலீசாகி தற்போது வரை 1100 கோடிகளை வசூல் செய்துள்ளது. பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாகி 61 கோடிகளை வசூல் செய்துள்ளது. கேஜிஎஃப் 2 படம் ஏப்ரல் 14 ம் தேதி ரிலீசாகி 800 கோடிகளை வசூல் செய்துள்ளது.

ஓடிடியிலும் சாதனை படைக்குமா
வலிமை, எதற்கும் துணிந்தவன் படங்களைத் தொடர்ந்து பீஸ்ட், ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 போன்ற பெரிய படங்கள் ஓடிடி.,யில் ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். வலிமை படத்தை போல் இவைகள் ஓடிடி.,யில் சாதனை படைக்குமா என தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











