Hidden OTT Gem: யூடியூபிலேயே கிடைக்கும் தரமான 5 கொரியன் படங்கள்.. மிஸ் பண்ணாம பாருங்க!
சென்னை: தியேட்டரைக் கடந்து, தொலைக்காட்சி சேனல்கள், வீடியோ கேசட்டுகள், டிவிடிகளில், உள்ளூர்களில் திரை கட்டி படம் பார்த்து எல்லாம் கடந்து இணையம் பரவலாக மக்கள் கைகளில் ஸ்மார்ட் போன்கள் மூலம் புலங்க ஆரம்பித்த பின்னர் இணையத்தில் படங்களை பார்க்கத் தொடங்கிவிட்டனர். அதன் வளர்ச்சி தான் ஓடிடி தளங்கள். நாளுக்கு நாள் ஓடிடி தளங்களில் படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இப்படி இருக்கும்போது கொரியன் சினிமாக்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உள்ளது.
சென்னையில் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் கூட கொரியன் படங்களை அதிக இருக்கை வசதி கொண்ட தியேட்டர்களில்தான் திரையிடுகிறார்கள். இருக்கைகள் எல்லாம் தீர்ந்தாலும் நாங்கள் நின்றுகொண்டு படம் பார்க்க தயார் என்று நின்று கொண்டு படம் பார்க்கும் அளவுக்கு ரசிகர்கள் அதிகம். அதுவும் படம் கொரியன் மொழியில் ஓட ஒட ஆங்கிலத்தில் இருக்கும் சப்டைட்டிலை படித்துக் கொண்டே படம் பார்க்கும் அளவுக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
பெஸ்ட் 5 படங்கள்: இந்நிலையில் தமிழில் டப் செய்யப்பட்ட, யூடியூப் தளத்திலேயே கிடைக்கிற கொரியன் படங்களில் 5 படங்கள் குறித்து காணலாம். ஒரு சைக்கோ திரில்லர் படம் பார்க்க அசைப்பட்டால் மிட் நைட் என்ற படத்தை பாருங்கள். படத்தில் நாமும் இருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஹார்ட் ஹிட் என்ற படம் பக்கா ஆக்ஷன் படமாக இருக்கும். கதாநாயகன் செல்லும் காருக்கு அடியில் பாம் வைத்து இருப்பார்கள். அதில் இருந்து எப்படி தப்பித்தார் என்பதுதான் கதை.

யூடியூபில் ஃப்ரீ: ஜாம்பி படங்கள், ஹாலிவுட் தொடங்கி நமது கோலிவுட் வரை எடுத்துவிட்டார்கள். ஆனால் உலக அளவில் இதுதான் ஜாம்பி படம் என்று சொல்லும் அளவுக்கான படம் என்றால் அது டிரைன் டூ பூசான். ஒரு பக்காவான தமிழ் கமர்ஷியல் ஆக்சன் படம் பார்த்த உணர்வு வேண்டும் என்றால் கொரியன் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் டாங் லீயின் தி ரவுண்டப். இந்த படத்தை தமிழ் டப்பிங்கிற்காகவே பார்க்கலாம். ஒரு டிடெக்டிவ் படம் பார்க்க ஆசைப்பட்டால், வெட்டெரியன் படத்தை பார்க்கலாம். இந்த படங்கள் அனைத்தும் யூடியூபில் அதுவும் இலவசமாக எந்தவிதமான சந்தாவும் செலுத்தாமல் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











