Best OTT web series of 2023: இந்த ஆண்டு வெளியான சிறந்த டாப் 5 ஓடிடி வெப்சீரிஸ் லிஸ்ட் இதோ!

சென்னை: சினிமா படங்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக தமிழிலும் பல ஓடிடி வெப்சீரிஸ்கள் இந்த ஆண்டு வெளியாகி உள்ளன. ஆக்‌ஷன், பகுத்தறிவு, காமெடி, டெக்னாலஜி என வெப்சீரிஸ்களிலும் இயக்குநர்கள் வெரைட்டி காட்டி வருகின்றனர்.

அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், ஜி5 மற்றும் நெட்பிளிக்ஸ் என அனைத்து ஓடிடி நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு பல தொடர்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளன.

Best OTT web series of 2023: From Ayali to Label many good content steals the show this year

அதில், இந்த ஆண்டு பெரும்பாலானோரை அதிகம் விரும்பி பார்க்க வைத்த டாப் 5 தமிழ் ஓடிடி லிஸ்ட் பட்டியல் குறித்து இங்கே காணலாம்.

5. தி வில்லேஜ்: மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் லேட்டஸ்ட்டாக வெளியான வெப்சீரிஸ் தான் வில்லேஜ். திகில் கலந்த ஸ்டோரியாக இது உருவாகி இருந்தாலும், கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

4. மத்தகம்: பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான வெப்சீரிஸ் தான் இந்த மத்தகம். அதர்வா முரளி, மணிகண்டன், டிடி நீலகண்டன், கெளதம் மேனன், நிகிலா விமல் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த இந்த வெப்சீரிஸ் இந்த ஆண்டு இரண்டு சீசன்களாக வெளியாகி ரசிகர்களுக்கு ஒரு பக்கா கேங்ஸ்டர் வெப்சீரிஸ் ட்ரீட்டை கொடுத்தது.

3. மாடர்ன் லவ் சென்னை: அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஆந்தாலஜியாக வெளியானது மாடர்ன் லவ் சென்னை. பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், தியாகராஜா குமாரராஜா, ராஜுமுருகன் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் ஒவ்வொரு கதையாக இயக்கி இருந்தனர். அசோக் செல்வன், வாமிகா காபி, ரிது வர்மா என பல பிரபல நடிகர்களும் நடித்த இந்த வெப்சீரிஸில் இடம்பெற்ற ஒவ்வொரு கதையும் வித்தியாசமான சென்னை காதலை வெளிப்படுத்தியது. தியாகராஜா குமாரராஜாவின் நினைவோ ஒரு பறவை எபிசோடு மற்றும் ராஜு முருகனின் லாலாகுண்டா பொம்மைகள் பலரது கவனத்தை ஈர்த்தது.

Best OTT web series of 2023: From Ayali to Label many good content steals the show this year

2. லேபில்: அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய், தான்யா ஹோப் நடிப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் லேபில் வெப்சீரிஸின் கதையே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வடசென்னை மக்கள் எல்லாருமே ரவுடிகள் இல்லை என்றும் மற்றவர்கள் அந்த பகுதி மக்கள் மீது குத்தியுள்ள லேபிலை மாற்றும் கதையாக அருண்ராஜா காமராஜ் உருவாக்கி உள்ளார்.

1. அயலி: ஜீ5 ஓடிடி தளத்தில் முத்துகுமார் இயக்கத்தில் வெளியான அயலி வெப்சீரிஸ் இந்த ஆண்டு ஏகப்பட்ட ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. மூடநம்பிக்கை என்கிற பெயரில் பெண்களுக்கு எதிராக தொடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக ஒரு சிறுமி எப்படி மொத்த ஊரையே மாற்றுகிறாள் என்றும் படிப்பின் அவசியத்தையும் எடுத்து அழகாக இந்த வெப்சீரிஸ் ஒரு பக்காவான பாடத்தை நடத்தி உள்ளது. வயதுக்கு வந்ததையே மறைத்து நடிக்கும் போல்டான கதாபாத்திரத்தில் ஹீரோயின் அபி நக்‌ஷத்ரா அசத்தியிருந்தார். இவை தவிர ஸ்டோரி ஆஃப் திங்ஸ், மை3, ஸ்வீட் காரம் காபி, செங்காளம் உள்ளிட்ட வெப்சீரிஸ்களும் இந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X