ஐஸ்வர்யா ராஜேஷின் "பூமிகா" ட்ரெய்லர் வெளியானது.. நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ்!

சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருபவர்.

சமீபத்தில் ஓடிடியில் வெளியான திட்டம் இரண்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

எனவே தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் அடுத்ததாக "பூமிகா" திரைப்படம் வெளியாக இருக்க இப்போது அதன் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டுள்ளது.

தங்கையாக

தங்கையாக

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் எந்த திரைப்படத்திலும் தன்னுடைய கதாபாத்திரத்தை முழுவதுமாக உள்வாங்கி மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் அதே சமயம் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் தங்கையாக நடித்து அசத்தி இருந்தார். இமேஜை பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் கதாபாத்திரத்தை மட்டும் நினைவில் கொண்டு நடிப்பில் கலக்கிக் கொண்டிருக்கும் இவருக்கு தெலுங்கில் இருந்தும் எக்கச்சக்க வாய்ப்புகள் வருகிறது. அந்த வகையில் ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் மற்றும் ரிபப்ளிக் என்ற படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம்

கதாநாயகிக்கு முக்கியத்துவம்

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நானியின் நடிப்பில் உருவாகிவரும் டக் ஜெகதீஷ் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து அங்கும் கால் தடத்தை பதித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் இப்பொழுது பூமிகா, டிரைவர் ஜமுனா, துருவ நட்சத்திரம் ,மோகன்தாஸ், மற்றும் தி கிரேட் இந்தியன் கிட்சன் தமிழ் ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்து நடித்திருந்த கா/பெ ரணசிங்கம் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்று இருந்த ஐஸ்வர்யாவுக்கு அதன் பிறகு தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகள் குவிகிறது. அந்தவரிசையில் உருவான திட்டம் இரண்டு சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நடிகரும் இயக்குனருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு திரையரங்குகளில் வெளியாக தயாராக இருந்தது ஆனால் கொரோனா பரவல் காரணமாக இன்று வரை திரையரங்குகள் திறக்கப்படுவது தாமதமாகிக் கொண்டே இருக்க படக்குழு படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட்டு மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மிடுக்கான போலீஸ்

மிடுக்கான போலீஸ்

ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை பல கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் திட்டம் இரண்டு படத்தில் முதன்முறையாக மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்து பட்டையைக் கிளப்பி இருக்கிறார் . காட்சிக்கு காட்சி விறுவிறுப்பை ஏற்படுத்தக் கூடிய இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுத்துள்ளது. எனவே ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்தடுத்த படங்களும் இதே போன்று வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். எதிர்பார்த்தது போலவே அடுத்ததாக பூமிகா வெளியாக உள்ளது. இதன் டிரெய்லர் இப்பொழுது வெளியாகி இணையதளத்தை மிரட்டி வருகிறது.

"பூமிகா" ட்ரெய்லர்

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் கீழ் வெளியாகவுள்ள பூமிகா திரைப்படத்தை இயக்குனர் ரதீந்திரன் கே பிரசாத் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க விது, பாவல், மாதுரி,சூர்ய கணபதி, ராயன், அவந்திகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரெய்லர் ஆரம்பிக்கும் போதே குழந்தை அப்பா என சொல்லத் தயங்க சூடு பிடிக்கிறது. பல ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் மர்ம பங்களா ஒன்றில் தங்கியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் உடன் இருக்கும் அனைவரையும் பேய் விடாமல் மிரட்டுகிறது. குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இருக்கும் குழந்தையை கைப்பற்ற பேய் நினைக்க அதிலிருந்து எவ்வாறு காப்பாற்றுகின்றனர் என்பதே இப்படத்தின் கதை . மலையின் உச்சியில் ஒற்றை மரம் ,மர்ம பங்களா, பயமுறுத்தும் இருட்டு, கடித்துக் குதறும் நரிகள் என காட்சிக்கு காட்சி ரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும் காட்சிகளாக பூமிகா ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

22ஆம் தேதி விஜய் டிவியில் ரிலீஸ்

22ஆம் தேதி விஜய் டிவியில் ரிலீஸ்

கதைத் தேர்வில் மிக கவனமாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் எந்த ஆரவாரமும் இல்லாமல் வெளியாகி மிகப்பெரிய வெற்றிகளை பெற்று வருகையில் பூமிகா திரைப்படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் மாலை 3 மணிக்கு இப்படம் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு ட்ரெய்லர் மூலம் வெளியிட்டுள்ளது. மலையாள படங்களுக்கு இணையாக தமிழிலும் த்ரில்லர் மற்றும் ஹாரர் படங்கள் வெளியாகி கொண்டிருக்க இப்பொழுது ஐஸ்வர்யா ராஜேஷின் பூமிகா படமும் மிகச்சிறந்த ஹாரர் படங்களின் பட்டியலில் இணையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. பூமிகா படத்தின் இயக்குனர் ரதீந்திரன் கே பிரசாத் இப்பொழுது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ள நவரசா ஆந்தாலஜி திரைப்படத்தில் சித்தார்த், பார்வதி,பாவல்,ராஜேஷ், அம்மு அபிராமி ஆகியோரின் நடிப்பில் உருவான இன்மை என்ற பகுதியை இயக்கி ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X