அடேங்கப்பா.. இத்தனை கோடிக்கா? புஷ்பா படத்தை அமேசான் பிரைம் எவ்வளவு கொடுத்து வாங்கியது தெரியுமா?

ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படத்தை அமேசான் பிரைம் பெரிய தொகை கொடுத்து ஒடிடியில் வெளியிட வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடிப்பில் கடந்த டிசம்பர் 17ம் தேதி புஷ்பா தி ரைஸ் திரைப்படம் வெளியானது.

இரு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் அடுத்த பாகம் இந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

300 கோடி வசூல்

300 கோடி வசூல்

2021ம் ஆண்டு வெளியான டோலிவுட் படங்களிலேயே அதிக வசூலை பெற்ற சூப்பர் ஹிட் படமாக அல்லு அர்ஜுனின் புஷ்பா தி ரைஸ் திரைப்படம் மாறி உள்ளது. அதிகபட்சமாக 300 கோடி ரூபாய் வரை இந்த படம் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பான் இந்திய படமாக புஷ்பா திரைப்படம் வெளியானது.

செஞ்சந்தனம்

செஞ்சந்தனம்

சாதாரண லாரி டிரைவரான புஷ்பராஜ் செம்மரக் கடத்தல் மூலம் எப்படி தனி சாம்ராஜ்யாத்தையே ஆந்திராவில் அமைக்கிறார் என்பது தான் இந்த புஷ்பா தி ரைஸ் படத்தின் கதை. புஷ்பராஜ் கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் புஷ்பாவாகவே வாழ்ந்துள்ளார். ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா காதலும் கவர்ச்சியும் கலந்து நடித்து அசத்தி உள்ளார்.

அமேசான் பிரைமில் ரிலீஸ்

அமேசான் பிரைமில் ரிலீஸ்

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் நாளை ஜனவரி 7ம் தேதி இரவு 8 மணிக்கு அமேசான் பிரைம் ஒடிடியில் வெளியாகிறது. திரையரங்குகளுக்கு சென்று புஷ்பா படத்தை பார்க்காத ரசிகர்கள் நாளை வீட்டில் இருந்தபடியே ஒடிடியில் கண்டு ரசிக்கலாம்.

எத்தனை கோடி

எத்தனை கோடி

ராவான ஆக்‌ஷன் திரைப்படமான புஷ்பா மற்றும் அதன் உலகத்தை உலகளவில் உள்ள ரசிகர்களும் அமேசான் பிரைம் ஒடிடி தளம் மூலம் கண்டு ரசிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ள நிலையில், எத்தனை கோடிக்கு அமேசான் பிரைம் புஷ்பா திரைப்படத்தை வாங்கியது என்கிற கேள்வி எழுந்துள்ளது.

30 கோடி ரூபாய்க்கு

30 கோடி ரூபாய்க்கு

அதிகபட்சமாக ரூ. 30 கோடிக்கு புஷ்பா படத்தின் ஒடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வரும் நிலையில், இந்த அளவுக்கு பெரிய தொகை கொடுத்து அமேசான் பிரைம் அந்த படத்தை வாங்கி உள்ளது. டிவியில் ஒளிபரப்பு செய்ய வழங்கப்படும் சாட்டிலைட் உரிமம் ரூ. 50 கோடிக்கு மேல் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சர்ச்சை காட்சி இருக்குமா?

சர்ச்சை காட்சி இருக்குமா?

தணிக்கையிலேயே தப்பித்த புஷ்பா படத்தின் சர்ச்சை காட்சி மக்கள் திரையரங்குகளில் பார்க்க சிரமப்பட்ட நிலையில், அதிரடியாக நீக்கப்பட்டது. இந்நிலையில், அமேசான் பிரைம் ஒடிடியில் எந்தவொரு தடையும் இல்லாத நிலையில், அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இடம் பெற்ற அந்த ஆபாச காட்சி இடம் பெறுமா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமந்தாவின் ஊ சொல்றியா பாடலின் முழு ஆட்டத்தையும் காண ரசிகர்கள் வெயிட்டிங்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X