‘Self Respect‘னா என்னனு தெரியாத ஜென்மம்.. பார்வதி, கம்ருதீன்.. பிரதீப் ஆண்டனியை கொண்டாடும் ஃபேன்ஸ்!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில், அனைவருக்கும் பிடித்தமான நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் முடிவடையும் இந்த நிகழ்ச்சி இல்லத்தரசிகள் முதல் அனைத்து தரப்பினரையும் கவரும் நிகழ்ச்சியாக இருக்கிறது. அண்மையில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் ரெட் கார்ட் பெற்று வெளியே அனுப்பப்பட்ட பார்வதி மற்றும் கம்ருதீன் கலந்து கொண்டு இருக்கும் நிலையில், இணையவாசிகள் முன்னாள் போட்டியாளர் பிரதீப் ஆண்டனியை புகழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 9 டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கின் போது, பார்வதி மற்றும் கமருதீன் இருவரும் சாண்ட்ராவை மிகவும் தரகுறைவான முறையில் பேசினார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வார்த்தை முற்றியது. இதனால் கோவத்தின் உச்சத்திற்கு சென்ற பார்வதி, காரை திறந்து சாண்ட்ராவை எட்டி உதைத்து வெளியில் தள்ளினார். இதற்கு, கம்ருதீனும் துணையாக இருந்து தள்ளிவிட்டார். இந்த எபிசோடை பார்த்த ஒட்டுமொத்த ரசிகர்களும் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என கூறினார்கள். இதை தொடர்ந்து பார்வதிக்கும் கம்ருதீனுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

Bigg Boss tamil 9 VJ Parvathy Kamruddin VJ

பார்வதி,கம்ருதீன்: ரெட் கார்டை பெற்று வெளியே வந்த பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்குமே சோசியல் மீடியாவில் ஆதரவு அதிகரித்தது. அதற்கு காரணம் சாண்ட்ராவிற்கு உண்மையிலேயே பேனிக் அட்டாக் வரவில்லை. பார்வதி மற்றும் கம்ருதீனை திட்டபோட்டே நடித்து அவர்களை வெளியே அனுப்பிவிட்டார் என்றும், கம்ருதீன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டபோது கூட, சாண்ட்ரா கத்திக் கூப்பாடு போட்டு நடிப்பு அரக்கி என்பதை நிருபீத்துவிட்டதாக சாண்ட்ராவிற்கு எதிராக இணையத்தில் பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து, இன்று நடைபெற்று வரும், பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்குமே முறைப்படி அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருவருமே நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதைப்பார்த்த இணையவாசிகள் பலர், 'Self Respect'னா என்னனு தெரியாத ஜென்மம் தான் பார்வதி மற்றும கம்ருதீன் இந்த நிகழ்ச்சியில் இருவரும் சுயமரியாதையை விட்டுவிட்டு கலந்து கொண்டார்கள்.

பிரதீப்பை கொண்டாடும் ஃபேன்ஸ்: பிக்பாஸ் சீசன் 7ல் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்கள் பூர்ணிமா, மாயா உள்ளிட்ட சிலர் அவருக்கு எதிராக சில குற்றச்சாட்டுகளை வைத்ததை அடுத்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார். அவருக்கு ரெட் கார்ட் கொடுத்தது சரியில்லை என அப்போது பலரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அதன் பின் பிக் பாஸ் டீம் ஃபைனலுக்கு வரும் படி அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் தனது சுயமரியாதை தான் முக்கியம் என நினைத்ததால், அதில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், பார்வதிக்கும் கம்ருதீனுக்கும் சுயமரியாதையே இல்லை என இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு பிரதீப் ஆண்டனினை தற்போது கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: bigg boss tamil 9 vj parvathy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X