அடுத்த மாதம் கல்யாணம்.. அதைவிடுங்க.. பிக் பாஸ் பாவ்னி இப்போ யாருக்கு ஜோடியா நடிச்சிருக்காரு பாருங்க!
சென்னை: பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற பாவ்னி ரெட்டி அடுத்த மாதம் தனது காதலர் அமீரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அமீர் மற்றும் பாவ்னி இணைந்து அஜித்குமாரின் துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதன் பின்னர் பாவ்னிக்கு மீண்டும் சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது விமல் நடித்துள்ள ஓம் காளி ஜெய் காளி எனும் வெப் சீரிஸில் லீட் ரோலில் பாமா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ள அந்த வெப் சீரிஸில் பாவ்னி
பாமாவாக நடித்துள்ள அறிமுக புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் பாவ்னி கிராமத்து பெண்ணாக பாவாடை தாவணி அணிந்து கொண்டு நடித்துள்ள காட்சிகள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து சினிமாவில் பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருமணத் தேதி: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார் பாவனி ரெட்டி. அந்த சீசனில் அவருடன் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய் நெருங்கி பழகி நட்பாகி வந்தார். ஆனால், வைல்ட் கார்டு என்டரியாக உள்ளே நுழைந்த அமீர் பாவ்னியை ஆரம்பத்தில் அக்கா என அழைத்துக் கொண்டு பழகி வந்த நிலையில், அதன் பின்னர் அவரது மனதில் இடம் பிடித்து காதலனாக மாறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா - ஆரவ், கவின் - லாஸ்லியா, பாலாஜி முருகதாஸ் - ஷிவானி காதல் ட்ராமாவை எல்லாம் பார்த்து சலித்த ரசிகர்கள், இதுவும் ஃபேக் காதல் என கூறிவந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதை பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். வரும் ஏப்ரல் 20ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.
விமலுக்கு ஜோடி: அஜித் குமாரின் துணிவு படத்தில் நடித்த பாவ்னி தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ள விமல் நடித்துள்ள ஓம் காளி ஜெய் காளி வெப்சீரிஸில் பாமா எனும் கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். இந்த வெப்சீரிஸில் விமலுக்கு ஜோடி இவர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் மார்ச் 28ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்த வெப் சீரிஸ் வெளியாக உள்ளது.
சுழல் 2வுக்கு போட்டி: அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான சுழல் 2 வெப் சீரிஸில் எப்படி கிராமத்து சிறு தெய்வங்களை கதை அம்சமாக வடிவமைத்து இயக்கியிருந்தார்களோ, அதே போல விமல் நடித்துள்ள இந்த வெப்சீரிஸுலும் கிராமத்து சிறு தெய்வங்களை மையப்படுத்திய கதையாக உருவாகி இருப்பது சமீபத்தில் வெளியான டீசரை பார்த்தாலே தெரிகிறது. பாமாவாக பாவ்னி அறிமுகமான வீடியோவிலும் அவர், கழுத்தில் எலுமிச்சை மாலையை அணிந்து கொண்டு அம்மன் போல காட்சி தரும் சீன்களும் வெளியாகி உள்ளன. ஏற்கனவே விமல் நடித்த விலங்கு வெப் சீரிஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், ஓம் காளி ஜெய் காளி வெப்சரிஸ் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்துக்கு முன்னதாக பாவ்னிக்கும் வெற்றி கிடைக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











