Poornima - ஓடிடியில் களமிறங்கும் பிக்பாஸ் பூர்ணிமா.. ‘ஆஹா’ஹீரோயினாக அறிமுகம்.. முழு விவரம் உள்ளே
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டிருப்பவர் பூர்ணிமா. முதல் நாள் முதல் இப்போதுவரை சிறப்பாக விளையாடிவரும் அவருக்கு ஆதரவும் இருக்கிறது விமர்சனமும் இருக்கிறது. அதிலும் மாயாவுடன் சேர்ந்துகொண்டு அவர் ரொம்பவே அநியாயம் செய்தார் என்ற விமர்சனம் எழுந்தது கவனிக்கத்தக்கது
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. ஏறத்தாழ 50 நாட்களை கடந்திருக்கும் நிகழ்ச்சியில் நாளொரு பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கிறது. பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட், தானாக வெளியேறிய பவா செல்லதுரை போக ஜோவிகா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, கானா பாலா, ஐஷு , விக்ரமன், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் எவிக்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.

வைல்ட் கார் எண்ட்ரி: இதற்கிடையே ஏற்கனவே எவிக்ட் செய்யப்பட்ட விஜய் வர்மா, அனன்யா ஆகியோர் வைல்ட் கார்ட் மூலம் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்திருக்கின்றனர். பிரதீப் ஆண்டனி இருந்தவரை கலை கட்டிய நிகழ்ச்சி அவரது வெளியேற்றத்துக்கு பிறகு சுவாரசியமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஓரளவு சுவாரசியமாகவே போட்டியாளர்கள் நிகழ்ச்சியை நகர்த்தி செல்கிறார்கள்.
பூர்ணிமா, மாயா: இந்த சீசனின் ஹைலைட்டாக இருப்பது என்றால் அது மாயவும், பூர்ணிமாவும்தான். கேப்டன்சியை பூர்ணிமா ஒழுங்காக செய்தார் என்ற பெயர் எடுத்தாலும் மாயாவின் கேப்டன்சி கீழ் அவரும் மாயாவும் எல்லை மீறி சென்றுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக விசித்திராவிடம் பூர்ணிமா உங்கள் மூளை கீழே கிடக்கிறது எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னதெல்லாம் கடுமையான கண்டனத்தை பெற்றுக்கொடுத்தது.
இன்னும் நீடிக்கிறார்: பூர்ணிமாவின் அந்த செயல்பாடை எல்லாம் பார்த்தபோது கண்டிப்பாக அவர் விரைவிலேயே வீட்டிலிருந்து வெளியேறிவிடுவாரோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறார். அநேகமாக இறுதி 5 பேருக்குள் பூர்ணிமா வருவாரோ என்று ரசிகர்கள் நினைக்க ஆரம்பித்திருக்கின்றனர். மேலும் அவரது தாய் உள்ளே வந்தும் நன்றாகவே தைரியம் கொடுத்துவிட்டு சென்றார்.
பூர்ணிமா நடிக்கும் படம்: இதற்கிடையே அராத்தி என்ற யூட்யூப் சேனல் மூலம் பிரபலமான அவருக்கு நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசை. பிக்பாஸ் மூலம் கிடைக்கும் பிரபல்யத்தை பயன்படுத்த நினைத்துதான் அவர் வீட்டுக்குள் வந்தார். அதேசமயம் வீட்டுக்குள் வருவதற்கு முன்னதாகவே நயன் தாரா நடித்த அன்னபூரணி உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஹீரோயின்: இந்நிலையில் பூர்ணிமா கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதன்படி படத்துக்கு செவப்பி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படமானது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. எம்.எஸ்.ராஜா என்பவர் படத்தை இயக்குகிறார். இந்த சூழலில் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதாவது முட்டையில் செவப்பி என்ற பெயருடன் அந்த டைட்டில் வெளியாகியிருக்கிறது.
ஆல் தி பெஸ்ட் பூர்ணிமா: இந்த டைட்டிலை பார்த்த ரசிகர்கள் முதல் லுக்கே வித்தியாசமாக இருக்கிறது. கண்டிப்பாக படமும் வித்தியாசமாக இருக்கும். பிக்பாஸ் மூலம் கிடைத்த பிரபல்யத்தையும், அனுபவத்தையும் வைத்து பூர்ணிமா சினிமாவிலும் வெல்ல வாழ்த்துகள் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். ஆல் தி பெஸ்ட் பூர்ணிமா..


Click it and Unblock the Notifications











